INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, August 10, 2022

FATHIMA MINHA

 A POEM BY

FATHIMA MINHA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


THE TOBACCO TREES GROWING TALL RIGHT IN FRONT OF MEDUSA’S EYES
The long queues grow longer and longer
surpassing snakes
Wondering whether it would be possible to hasten the
tortoise-speed moving ahead
hoping that it would surely get
the eyes of those behind scrutinizing
grow weary.
The heartrending wail of scarcity
Is echoed in the non-stop cry of the baby next door
Four and more days of bearing with an empty stomach
as paying the price for those forty years
of shouting at his wife
for a little delay in serving food
the old man in the row fumes in silence
over his hunger so familiar.
There would be none
So I can easily have petrol
Thinking on these lines one leaves home early in the morning
to get petrol.
Those who had been standing in the queue
day before yesterday
were sleeping there upon the pillow and mat
taken along.
Those with ‘self-respect lose their sleep
over loans taken which they are not in a position to repay
They all too often go to the towering bridge to get some air.
With the oil-lamp being tumbled upon and displaced
Fire erupting in the multi-storeyed apartment and spreading
The Emergency number pressed umpteen number of times
They too had gone to stand in the queue.
The nurses in the hospitals prepare the list of patients
based on the intensity of the patients’ affliction.
As the surgery had to be postponed
the patient lamenting
whether to cling to life or let it go
and the medicines that put him to sleep
refuse him the relief.
When will the nation
made to stand in front of Medusa
be awakened, they ask
Till the time it turns frozen into stone
and evaporating into a dream
they all were mutually observing.
MEDUSA
In Greek mythology, Medusa, also called Gorgo, was one of the three monstrous Gorgons, generally described as winged human females with living venomous snakes in place of hair. Those who gazed into her eyes would turn to stone. (WIKIPEDIA)

Fathima Minha

மெடூசாவின் கண்முன்னே நீண்டு வளரும் புகைமரங்கள்
*
நீள்வரிசைகள் அரவங்களைத்
தோற்கடித்து வளர்கின்றன
எப்படியும் கிடைத்துவிடும் என முன்னால் நகரும் ஆமை வேகத்தை
முடுக்கிவிட இயலாதா என பின்னால்
நிற்பவரின் கண்கள் உற்றுப்பார்த்துக் களைத்துவிட்டன
பொருள் தட்டுப்பாட்டின் அவலக்குரல்
அடுத்தவீட்டுக் குழந்தையின் சமாதானமாகாத அழுகுரலில்
தெரிகிறது
நாற்பது வருடமாய் பசித்தவுடன்
உரத்தகுரலில் இன்னும் சாப்பாடு மேசையில் வைக்கலயா என பரிமாறுவதற்கு இடையில்
துணைவியை நொந்துகொண்ட சினத்தின் பரிகாரமாய்
நான்கு வெற்றி நாட்கள் கடந்த நிலையில்
வரிசையில் பழகிய பசியின் பொறுமையை
நினைத்துப் புழுங்குகிறார் முதியவர்
எவரும் இருக்க மாட்டார்கள்
காரியம் சாதிக்கலாம் என
இறுமாப்புடன்
அதிகாலை இரண்டு மணிக்கு எரிபொருள் நிரப்பச் செல்கிறார் ஒருவர்
நேற்று முன்தினம் நின்றவர்கள் பாய் தலையணையுடன்
அங்கேயே உறங்கிப்போயிருந்தனர்
திகதி பிந்தியும்
திருப்பிக் கொடுக்க முடியாத பணத்திற்காக
உறக்கம் தொலைகிறார்கள்
சுயமரியாதைக்காரர்கள்
பாய்ந்து வீழ்ந்தாலும் மீட்கமுடியாத
உயரமான பாலத்திற்கு அடிக்கடி காற்று வாங்கச் செல்கிறார் அவர்கள்
எண்ணெய் விளக்கு தட்டுப்பட்டு சரிந்ததில்
அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ பரவ
அவசர உதவி எண் அடிக்கடி அழுத்தப்படுகிறது
அவர்களும் வரிசைக்குச் சென்றிருந்தனர்
வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தாதியர்
யார் தீவிரம் என்பதைப் பொறுத்து
நோயாளி பட்டியலை நிரலிடுகின்றனர்
சத்திரசிகிச்சையைத் தள்ளிப்போட நேர்ந்ததால்
உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருப்பதா
விட்டுவிடுவதா என அங்கலாய்க்கும்
நோயாளிக்கு உறங்க வைக்கும் மருந்துகள்
உறக்கத்தை மறுதலிக்கின்றன
மெடூசாவின் கண் முன்
நிறுத்திவைக்கப்பட்டுள்ள தேசம் எக்காலத்தில் மீளும் என கேட்கிறார்கள்
கல்லாகி உறைந்து
கனவாகிப்போகும் வரை என அனைவரும் பேசிக்கொள்கின்றனர்.

~மின்ஹா.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024