A POEM BY
K.SARASWATHI
to grasp Mathematics
knows how to count the stars
She who doesn’t draw in her workbook
draws a great grand chariot-kolam
at her threshold
The one who doesn’t learn
the verses to memorize
becomes Andal herself
while singing Thiruppaavai.
He who the world map turns
ill-at-ease
knows all the streets and lanes of his place.
The school makes those
who excel in the lesson of Life
sit in the last row of the class.
Alas…..
பாடம்
கணக்கே வராத ஒருவனுக்கு
நட்சத்திரங்களை எண்ணத் தெரிந்திருக்கிறது.
செயல்முறை ஏட்டில் படம் வரையாதவள்
வாசலை அடைத்துத் தேர்க்கோலம் போடுகிறாள்
மனப்பாடப் பாடல்கள் படிக்காத ஒருத்தி
திருப்பாவை பாடுகையில்
ஆண்டாள் ஆகிறாள்
நிலவரைபடம் அறியாத அவனுக்கு
ஊர்த்தெருக்கள் அத்தனையும்
அத்துப்படி.
வாழ்க்கைப்பாடங்களில் தேறிய இவர்களை
கடைசி வரிசையில்
அமரச் செய்கிறது கல்விக்கூடம்.
_ கி.சரஸ்வதி
No comments:
Post a Comment