A POEM BY
THENMOZHI DAS
I stop and gulp the chill of the August rain
In that hour when howls wander
ruined house and its secrets
are but nightmare happening
The place where many lives are fast asleep
keep swaying as an empty swing
in the eyes of she who resides with solitude
When the weaver birds bring fireflies
for their chicks and light their nests
rolling my aloneness into a tiny ball of light
I send it inside
It becomes the Moon
that gives solace to the chicks
When a chick pecks at it
taking it to be Its feed
The Moon all alone
sings a lullaby inside that nest
The rejuvenating lines of that song
underlining the fact
that life is not all that simple
sets erect my hip-bones.
My body, as weaverbird sets out
revisiting the place.
The abodes of widows
the lane where children sleep in the open
Kattuviriyan snakes
Swaying‘Karuvelam’bush
Bullock-carts hauling sand from the river
Seeing all those I stand
at the threshold of my house
in the well of night
Darling puppies that relish my love
and live on
come running
I need no God
Mikira is kissing me.
மிகிரா
•
ஆந்தை அலறும் இரவுகளில்
ஆவணி மழையின் குளிரினை நின்று பருகுகிறேன்
வவ்வால்கள் அலையும் அந்நேரம்
பாழடைந்த வீடும் அதன் ரகசியங்களும்
நிகழ்ந்து கொண்டிருக்கிற கொடுங்கனவு
பல உயிர்கள் உறங்கும் ஊர்
தனிமையோடு தங்கியிருக்கும் ஒருத்தியின் கண்களுக்குள்
யாருமற்று ஊஞ்சலாய் ஆடிக்கொண்டே இருக்கிறது
தூக்கனாங் குருவிகள் தன் குஞ்சுகளுக்கு
மினுக்கட்டான் பூச்சிகள் கொண்டுவந்து கூடுகளில் விளக்கேற்றுகையில்
தனிமையை சிறு ஒளியென உருட்டி அலகில் அனுப்புகிறேன்
குஞ்சுகளுக்கு தவிப்பை மாற்றும் நிலவாகிறது
இரையென நினைத்து குஞ்சொன்று தனிமையைக் கொத்தும் போது
அக் கூட்டுக்குள் தாலாட்டு ஒன்றினை பாடுகிறது தனிமை ததும்பும் நிலா
வாழ்வு அவ்வளவு எளிதல்ல எனபதாய் அமைந்த அத் தாலாட்டின்
உயிரூட்டும் வரிகள் என் விலா எலும்புகளை நிமிர்த்துகின்றன
உடல் தூக்கனாங்குருவியாய் ஊர் பார்க்கச் சென்றது
விதவைகளின் வீடு குழந்தைகள் வீதியில் உறங்கும் தெரு
கட்டு விரியன் பாம்புகள் அலையும் கருவேலம் புதர்கள்
ஆற்றிலிருந்து மணல் அள்ளிவரும் மாட்டு வண்டிகள்
எல்லாம் கண்டு பின் இரவில் வீட்டு வாசலில் நிற்கிறேன்
எனதன்பை உண்டு வாழும் நாய்குட்டிகள் ஓடிவருகின்றன
எனக்கு எந்தக் கடவுளும் வேண்டாம்
மிகிரா முத்தமிடுகிறாள்
•
Composed by Thenmozhi Das
No comments:
Post a Comment