A POEM BY
MARIMUTHU SIVAKUMAR
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
RAIN-THIRSTY CROP
Though there were indications of downpour
Rain was nowhereThe rain with dark countenance
remained haughty and proud
Though mercy is inherent in rain
It chose to be a demon
In the raindrops to pour
There would be solutions to secure
Hoping so the crops were looking above
Mockingly viewing those crops
which stood waiting in a row
telling each other that
in those droplets
essentials for appeasing the hunger of crops
would descend in heaps
the Rain began to laugh sarcastically
Hei you, Rain
Are you so merciless?
Can’t you be a little kind
Don’t you understand the intensity of our afflictions
Why, Oh why –
The cries and protests of the crops
failed to move the Rain.
A tiny sapling sprouted
kissing the soil which made it possible
From the soil it created a stone
of immense power
That stone gathered all its energy
and the stone thus turning into a massive force
joining hands with the crops
craving for rain
threw itself towards the rain-clouds
The vigour of the crops exploded up there
Scattering everywhere.
மழைக்கு ஏங்கும் பயிர்.
கோடைக்குப்பிறகு மழை பெய்வதற்கான அறிகுறி தென்பட்டும்
மழை பெய்வதாயில்லை.
மழை இருண்ட முகத்தோடு கர்வமாயிருந்தது
மழையுள் இரக்கமிருந்தும் அரக்கத்தனமாயிருந்தது.
பெய்யப்போகும் மழைத்துளிகளில்
தீர்வுத்துளிகள் விழப்போவதாக
காத்திருக்கும் பயிர்கள் வானத்தை பார்த்த வண்ணமிருந்தன.
அத்துளிகளில்
பயிர்களின் பசியை போக்கும்
அத்தியாவசிய பண்டங்கள்
கொட்டப்போவதாக பயிர்கள் பேசிக்கொண்டு வரிசையில் காத்திருப்பதை மழை ஏளனமாய் பார்த்து சிரிக்க ஆரம்பித்தது.
ஏய் மழையே,
உன்னில் கருணை இல்லையா
உன்னுள் இரக்கமில்லையா
நாம் படும் வேதனைகள் உனக்கு புரியவில்லை ஏன்...?
பயிர்களின் கோசங்களும் போராட்டங்களும் மழைக்குள் எந்த வித அதிர்வுகளையும் ஏற்படுத்துவதாயில்லை.
பயிரொன்று
தான் முளைவிட்ட மண்ணை முத்தமிட்டு எழுந்தது.
தான் வாழ்ந்த மண்ணிலிருந்து அதி வீரியமான கல்லொன்றை உருவாக்கியது.
அக்கல் தன் முழு சக்தியையும் திரட்டியது.
திரண்ட கல் மழைக்காக ஏங்கிய பயிர்களோடு சேர்ந்து
மழை மேகங்கள் நோக்கி தன்னை எறிந்தது
பயிர்களின் வீரியம் வானத்தில் வெடித்து சிதறியது.
~~~~~~
மாரிமுத்து சிவகுமார்.
No comments:
Post a Comment