Seen on a daily basis
even the mount acquires a human form
It becomes so close as to be addressed
by a pet name
He has climbed umpteen number of
times
gained a whole lot in its coziness
But now
between the mountain and himself
a scratch has grown into a massive sink
Standing on pointed toes
Straining the neck
Jumping and leaping
All in futile
The mountain is not at all seen.
Then he wrote in his diary
thus a consolation:
“That mountain has descended into
Time
for all times”
*
கவிஞர் குணா கந்தசாமிமொழிபெயர்ப்பு
தொடர்பான சில கருத்துகளை முன்வைத்துள்ளார். அவர் முன்வைத்துள்ள கருத்துகள் முக்கியத்துவம்
வாய்ந்தவை. அவற்றையும் அதற்கான என் மறுமொழியையும்
இங்கே பகிர்ந்திருக்கிறேன். கவிஞர் குணா கந்தசாமிக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.
............................................................................................
குணா கந்தசாமி: //அனாமிகா ரிஷி அவர்களுக்கு
நன்றி. கவிதைகளை மொழியாக்கம் செய்யும்போது சில பிரத்யேகமான சவால்கள் இருக்கின்றன.
உதாரணமாக இந்தக் கவிதையில் உள்ள 'தமிழ்த்தன்மை'
என்பதை ஆங்கிலம் மட்டுமே அறிந்த வாசகர் உணர வாய்ப்பில் லை. இந்தக் கவிதை தன்னுள் கொண்டிருக்கும் மிக ஆதாரமான மறையான 'அந்தக் காலம் மலையேறி விட்டது' என்பதற்கும்
'அந்த மலை காலத்துக்குள் இறங்கிப்போய்விட்டது' என்பதற்குமான
தொடர்பு, மொழியின் வழியான ஒரு சிறு விளையாட்டு என்பதால் மொழியாக்கத்தில்
கவிதையை அனுபவிக்க நுட்பத்தைவிட அதன் ஒட்டுமொத்த அனுபவத்தையே நாம் நம்பவேண்டியிருக்கிறது.//
.......................................................................................................
Anaamikaa Rishi //வணக்கம். உங்கள் பதிவு உண்மை யானது. கவிதையை வாசித்தபோது - ஒரு வாசிப்பில், தமிழ் தெரிந்திருந்தாலும்கூட, அதில் பொதிந்திருக்கும் ‘காலம் மலையேறிவிட்டது’
என்ற தமிழுக்கே உரித்தான சொல்வழக்கு என் நினைவுக்கு வரவில்லை. ஆனாலும், ‘அந்த மலை காலத்துக்குள்
இறங்கிப்போய்விட்டது’ என்பதில் ஏதோவொன்று கவித்துவத்தோடு உள்ளடங்கியிருக்கிறது என்று மனதிற்குப் பட்டதால்தான் வெறுமேThat mountain has descended into Time என்பதோடு நிறுத்தா மல் for all times” என்பதையும் சேர்த்துக்கொண்டேன். ஒருவேளை நீங்கள் காலம் மலையேறிவிட்டது
என்ற வரியை நேரடியாகப் பயன்படுத்தியிருந்தால் அந்த இறுதி வரியை மொழிபெயர்க்க
இன்னும் திணறியிருப்
பேன்! மொழிசார்ந்த
தனித்தன்மையோடு மொழிபெயர்ப்பாள
ரின் போதாமையும் உண்டுதானே! உங்கள் கவிதை யிலேயே ‘வடு’ மடு, எக்கிப் பார்த்தல், ‘அன்றாடம் கண்டால் மலைக்கும் மனுஷரூபம் தான்’ போன்ற சொல்லாடல்களை
இன்னும் நேர்த்தியாக
மொழி பெயர்க்க முடியும் என்றே ஒரு வாசகராக எனக்குப் படுகிறது. இரண்டாவது வரைவில் மொழிபெயர்ப்பை
இன்னும் செம்மைப்படுத்த
முடியலாம் - தோழமையுடன் லதா ராமகிருஷ்ணன்.//
குணா கந்தசாமி
அன்றாடம் கண்டால்
அன்றாடம் கண்டால்
மலைக்கும் மனுஷ ரூபம்தான்
செல்லப்பெயர் சொல்லுமளவு சொந்தம்தான்
எண்ணற்ற தடவை ஏறியிருக்கிறான்
அதன் ஆதுரங்களில்
என்னென்னவோ அடைந்திருக்கிறான்
ஆனால் இப்போது
அவனுக்கும் மலைக்குமிடையே
சிறிய வடுவொன்று
பெரிய மடுவாய் விழுந்துவிட்டது
எக்கிப் பார்த்தாலும்
அண்ணாந்து பார்த்தாலும்
குதித்துப் பார்த்தாலும்
மலை தெரியவில்லை
அப்புறம் அவன்
தன் நாட்குறிப்பேட்டில்
இப்படி சமாதானம் எழுதிவைத்தான்
'அந்த மலை
காலத்துக்குள்
No comments:
Post a Comment