INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 21, 2020

MUVAIS ANSARI

THREE POEMS BY 
MUVAIS ANSARI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1) MUDDY DWELLING
At the corner of the school road_ my house
On both sides of my house there are walls touching the sky
The walls are hanging in the sky
The grievances of birds are too many
They bring along the grievance-boxes.
Humans have come here as tenants.
Who is the owner of this place? Where is he?
Questions spring
Answer not known.
Man captured the land
As it is all gone
He seeks a place in the sky.
The frontiers also stretch on.
Are sea and rivers exceptions?
Buildings are scraping the sky
the sparrow complains
For breathing the swan purifies the wind.
It is the swan that can separate water and milk
That’s why the responsibility is left with it.
Humans pollute
causing fury in clouds.
My house remains buried.
Even while wading through the road
you would be blissfully unaware of it.
Seen from the sky
my house would look a mere pit.
The mud of our house-roof
would leak when it rains.
The roof is seventy year old.

மண்கூடு
*************
பாடசாலைத்தெருவோரம் எனது வீடு
என்வீட்டின் இருமருங்கிலும் வானத்தின் அளவில் சுவர்கள்
சுவர்கள் வானில்தொங்குகிறது
பறவைகளின் முறைப்பாடுகளின் எண்ணிக்கையோ அதிகம்
முறைப்பாடுப்பெட்டிகளை அவைகள் கொண்டுவருகிறது
மனிதர்கள் வாடகைக்கு வந்தவர்கள்
இடத்தின் உரிமையாளர் யார்? எங்கே?
கேள்விகள் எழுகிறது
பதில் தெரியவில்லை
நிலத்தை பிடித்தான்
முடிந்துவிட்டதால்
இடமில்லை என்றதும் வானில் இடம் பார்க்கிறான்
எல்லைகள் நீளமாகச் செல்லுகிறது
கடலும்,ஆறுகளும் விதிவிலக்கா?
கட்டிடங்கள் வானில் தட்டுகிறதாம்
சிட்டுக்குருவியின் முறைப்பாடு
சுவாசிப்பதற்குக் காற்றை சுத்தம் செய்கிறது
அன்னம்
அன்னம் தான் நீரையும் ,பாலையும் பிரிக்கும்
அதனால் தான் அதற்கு அந்தப்பொறுப்பு
மனிதர்கள் மாசுபடுத்துகிறார்கள்
மேகங்கள் கோபப்படுமளவுக்கு
என்வீடு மண்ணில் புதைந்துள்ளது
வீதியால் சென்றாலும் விளங்காது
வானில் இருந்துபார்த்தாலும்
பள்ளமாய் தோன்றிடுமே
என்வீடுகளின் கூரை களிமண்
மழை வந்தால் ஒழுகும்
கூரையின் வயது எழுபது

இறயூர் முவைஸ் அன்சாரி
இறக்காமம்
2020:06:08

(2)
Let all sins leave the heart
Let ethnic differences rot
Let children fly
Let all ailments die
Let new passages come to be
Let us realize Nature’s worth
and the value of animals
Let there be the rain of grace
enabling fresh humanity to surface

பாவங்கள் உள்ளத்திலிருந்து அழியட்டும்
இன வேறுபாடு ஒழியட்டும்
சிறார்கள் சிறகடிக்கட்டும்
நோய் நீங்கட்டும்
புதுப்பாதைகள் பிறக்கட்டும்
இயற்கையின் அருமை விளங்கட்டும்
விலங்குகளின் விலைமதிப்பு தெரியட்டும்
அருள் மழை இனிதே கொட்டடும்
புது மானிடம் துளிர! ....



(3)

For the peasant-priest

who ploughs and grows crops

so makes amends to the soil _

offer at least once

a smile as a small loan.

Let him laugh to his heart’s content

for just a minute

unloading the burden

on his backbone.


பயிரிட்டு பூமிக்கு

பரிகாரம் செய்யும்

பூசாரிக்கு

ஒருதடவையேனும்

புன்னகையை

கடனாக கொடுங்கள்

ஒரு நிமிடமேனும்

சிரிக்கட்டும்

தன் முள்ளந்தண்டிலுள்ள

சுமையை இறக்கிவிட்டு!...

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024