INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, June 21, 2020

THAMIZHKIZHAVI (KUGATHARSANI)'S POEM

 A POEM BY  THAMIZHKIZHAVI  
(KUGATHARSANI)

Translated into English by Latha Ramakrishnan

(*with suitable modifications by the poet herself).

PRAYER
Offering cool shade for thousands of birds
that come seeking solace
is indeed blessing supreme.
That it provided shade during summer
allowed place to build nest
offered shelter during rain
doesn’t make any bird
the tree’s kith and kin forever.
Yet
The tree’s fervent prayer is _
With all the green leaves still there
withering, turning barren
when the time comes for its life to turn dry
among those thousands of birds
that visited there chirping sonorously
painting the nest with an enlivening brush having ‘receivers’
but for some reason refusing to draw the boon called Life
imprisoning with the fetters of torment called 'pain'
stolen the heart and has flown off
that stone-hearted lively bird
With the feathers of youth slowly coming off
The vision turning dim and
flying and preying proving burdensome
growing old
Living the evanescence of life languishing all the while
Learning it and growing bitter
Despite turning weak and flying for a long distance
yet not beaten
On a day when it comes to see _
A few worms:
for appeasing its hunger and feel gratified
and breathing imprints of
that live portrait of love:
to view and marvel _
should survive, outlast, be alive
and kicking within.
And
on that day
In its presence
a death so serene
should happen.
Amen....

தமிழ்க்கிழவி(குகதர்சனி)யின் கவிதை

பிரார்த்தனை

ஆறுதல் தேடி வரும்
ஆயிரமாயிரம் பறவைகளுக்கும்
குளிர்நிழல் தருவது என்பது
பெருவரம் தான்.
கோடையில் நிழல் தந்தது என்றோ
கூடு கட்ட இடம் கொடுத்தது என்றோ
மழைக்கு ஒதுங்க மறைவு அளித்தது என்றோ
எந்தப் பறவையும் எப்போதும் அம்மரத்துக்கே
நிரந்தர உறவாகிவிடுவதில்லை.
இருப்பினும் _
மரத்தின் ஆகப்பெரும்
பிரார்த்தனை யாதெனில் _
மீதமுள்ள பச்சிலைகளும்
வாடிப் பழுத்து உதிர,
மொட்டையாகி
உயிர் வற்றிப் போகுமோர்
பருவம் வந்தெய்துகையில்,
ஆரவாரமாய்
அழகழகாய் வந்துபோன
ஆயிரமாயிரம் பறவைகளுள்
உணர் கொம்புள்ள
உயிர்த்தூரிகையால்
அன்பெனுங் கூட்டை
உயிர்ப்பாய் வரைந்து
வாழ்வெனும் வரத்தை ஏனோ
வரைய மறுத்து
வலியெனும் வதைவிலங்கை மாட்டி
அகங்கொத்திப் போன
அந்த வைரமன உயிர்ப்பறவை…
பால்யத்தின் சிறகுகள்
மெல்ல உதிர்ந்து
பார்வைத்திறன் மங்கிப்
பறத்தலுந் தேடலுங்
கனமாகி முதிர்ந்திடினும்,
வாழ்வின் நிலையாமையை வாழ்ந்து வருந்திக்
கற்றுக் கசந்து
பலகாலம் பறந்திளைத்தும்
சலிக்காமல்
பார்க்க வரும்
ஓர் நாளில்
ஆறுதலாகி அதன் பசியாற்றி அகமகிழ
எங்கேனும் ஒரு பொந்தில்
ஒரு பத்துப் புழுக்களும்
பார்த்து வியந்துருக
அவ் அன்போவியத்தின் உயிர்ச்சுவடுகளும்
தப்பிப் பிழைத்து
தன்னுடன் தங்குமளவுக்கேனும்
தன்னில் உயிர்ப்பு
இருந்துவிடவேண்டும்….
அந்நாளில் அதன் முன்னே
அழகாய் ஓர் மரணம்
நிகழ்ந்திடல் வேண்டும் என்பதே…..

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024