INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, June 22, 2020

YAVANIKA SRIRAM'S POEM


A POEM BY 
YAVANIKA SRIRAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

WAILS SUCCINCT
Asked in a line, too brief
Your tombstone statement
Or the message of your entire life – everything
Asking the child 'Who is your favourite'
the very moment Parents die in land yonder
It is the same one who declares proudly ‘My Country’
expresses apprehension “But, there is something disquieting”
It is the same one who had shed tears “O, how much I loved”
turned into a murderer.
Toor dhall grains, music of love, god’s fleeting glance,
the howl of dog and so on
are but brief indeed
In his verdict to many pages
the judge underlining sentences coming under Sections,
Further
men asking their women ‘what at all you want , my dear’
are but wails so brief
The voluminous text Crime and Punishment
is just the synopsis of Hunting and Farming
_ claim some.
What to do _ pathetic indeed
Since birth voices are being heard in the ears of one and all.
In the meanwhile
They who don’t know how to say things ‘in short’,
to put it comically
swoon in the queue to prove
collapsing.
Yavanika Sriram

சுருக்கமான கதறல்கள்

மிகச்சுருக்கமாக கேட்கப்படுகிறது
ஒருவரியில்
உங்கள் கல்லறை வாசகம் அல்லது முழுவாழ்வின் செய்திகள் எதுவும்
யாரைப்பிடிக்கும் என குழந்தைகளிடம்
கேட்கும் போதே பெற்றோர்கள் அப்பாலையில்
இறந்துவிடுகிறார்கள்
எனது தேசம் என நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொள்ளும் ஒருவர்தான் ஆனால் அதில் ஒரு சங்கடமான விசயம்
என்று அச்சம் தெரிவிக்கிறார்
எவ்வளவு நேசித்தேன் என்று கண்ணீர் சிந்தியவர்தான் கொலையாளியாகிவிட்டார்
துவரைப்பருப்புகள் காதலிசை கடவுளின் கடைக்கண்பார்வை
நாய் குரைக்கும் ஓலம் போன்றவை
சுருக்கமானவைதான்
பலபக்கக்
குற்றப்பத்திரிக்கையில் நீதிபதி
செக்ஷனுக்குள் வரும் வாக்கியங்களின் கீழ் அடிக்கோடிடுவது மேலும்
வெகுநாட்களாய்
பெண்களிடம் ஆண்கள் உனக்கு என்னதான்மா வேண்டும் எனக்கேட்பது போன்றவை மிகச்
சுருக்கமான கதறல்கள்
குற்றமும் தண்டனையும் என்ற பெரும்பிரதி
வேட்டையாடுதலுக்கும் விவசாயத்திற்குமான
வெறும் சுருக்கம் என்பாரும் உண்டு
என்னசெய்வது பரிதாபம்தான்
பிறந்ததிலிருந்து எல்லோர் காதுகளிலும் பேச்சுக் குரல் விழுந்தபடிதான் இருக்கிறது
இதற்கிடையில்
எதையும் சுருக்கமாகச் சொல்லத் திராணியற்றவர்கள் ஒரு நகைச்சுவைக்காகச் சொல்கிறேன் நிரூபணத்திற்தகான வரிசையில் மயங்கித் தரை விழுந்து விடுகிறார்கள்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024