INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, June 22, 2020

PALAIVANA LANTHER'S POEMS(2)

TWO POEMS BY 
PALAIVANA LANTHER

Translated into English by Latha Ramakrishnan (*First Draft)

(1) SHE HE.....


The wild river flowing into the stream –Female
No secret-word of Time immemorial in between
Palm-lines -the Trail of Jungle
Gullet - the Spring
Words _ the Tide
Eyes interacting _ Razor-edge
Glowing skin -Cheetah outlined
Red slice of flesh _ Lips
Human - Wrath
The doors that are banged shut – Ears
Crescent moon sapping and growing _ the Spine
A sculpture bending and straightening –She
The speed of stallion that runs
escaping her entire nervous system _
Her Destiny
In the smoke inhaled right up to the lungs
mistaken names many.
With tears oozing the scenes would cease to be
Thought would freeze.
A chapter searched for in History
A sundown
for ‘She’ the persona of many a ‘He’.

அவள் அவன்..
ஓடைக்குள் இறங்கும் காட்டாறு பெண்
யுகாந்திர ரகசியச்சொல் இடை இடையில் இல்லை
காட்டின் வழித்தடம் ரேகைகள்
தொண்டைக்குழிச் சுனை
வார்த்தைகள் சுழல்
பரிவர்த்தனை செய்யும் விழிகள் கூர்முனை
மினுங்கும் தோல் வரிப்புலிக்கோடுகள்
சிவந்த மாமிசத்துண்டு இதழ்கள்
நரம் சினம்
அறைந்து சாத்தப்படும் கதவுகள் காதுகள்
தேய்ந்து வளரும் பிறை முதுகுத்தண்டு
வளைந்து நிமிரும் சிலை
அவள்
அவளின் மொத்த நரம்புகளுக்குள்
அகப்படாமல் ஓடும் புரவி
வேகம் விதி
நுரையீரல் வரை இழுக்கும் புகையில்
ஏகப்பட்ட பெயர் பிழைகள்
கண்ணீர் கசிந்து காணாமல் போகும் காட்சிகள்
சலனமற்று உறைந்து போகும் சிந்தனை
வரலாற்றில் தேடப்படும் ஓர் அத்தியாயம்
ஓர் அந்தி
அவளுக்கு அவன்களின் அடையாளம்..
***

(2) NEURON SPLIT INTO TWO
Inserting green leaves in the rusted razor edge
of a sharp knife
He extends it towards the rabbits
With ash-coloured eyes gleaming.
Of kiss you’ve written thus
in your diary.
Night after night
something or other to get
It has the charm of
taking you far away from sleep.
For the time being
I have bound you in chain.
You are made to stand
in front of questions myriad
for the perceptions of those
How to apprehend the secret of smile
unperturbed
I wait to confront
at the moment when you fumble
casting away those copper plates
accessed in archeological surveys
you safeguard the skull of child
not yet fully decayed
in the upper folds of your sari.
The focus of your longings
has no fixed yardstick.
Splitting yourself into two
Getting lost in one
and searching in another
you highlight the fact
that your mind is in tact
through your writings.
You are the lone maimed female
dancing ballet amid
double-edged razor- sharp points.

இரண்டாய் வகுக்கப்பட்ட நியூரான்-
கவிதை-பாலைவன லாந்தர்
துருவேறிய கூர்மையான
கத்தியின் நுனியில்
பச்சைத் தளைகளை நுழைத்து
சாம்பல் கண்கள் மினுங்கும்
முயல்களை நோக்கி நீட்டுகிறான்
முத்தமிடுதலைக் குறித்து
இவ்வாறாக உன் டைரியில்
எழுதி வைத்திருக்கிறாய்
இரவு தோறும் ஏதேனுமொன்று
கிடைத்துக்கொண்டே இருக்கிறது
அது தூக்கங்களிலிருந்து
தொலைதூரத்திற்கு அழைத்துச் செல்லும்
மாயம் நிறைந்தது
தற்காலிகமாக உன்னை
சங்கிலியால் பிணைத்திருக்கிறேன்
அதிகமான கேள்விகளுக்கு
முன்பு நிறுத்தப்படுகின்றாய்
அதைக்குறித்து பார்வைகளுக்கு
சலனமற்ற புன்னகையின்
இரகசியத்தை எவ்வாறு அறிவேன்
நீ தடுமாறும் ஒற்றைப்புள்ளியில்
சந்திப்பதற்காக காத்திருக்கிறேன்
அகழ்வாராய்ச்சியில் கிடைத்த
செப்புத்தகடுகளை தூக்கியெறிந்துவிட்டு
முழுவதும் அரித்துப்போகாத
பிள்ளை மண்டையோட்டை
முந்தானைக்குள் பத்திரப்படுத்துகிறாய்
உன் ஏக்கங்களின் வரையறையில்
தெளிவான அளவுகோல் இல்லை
உன்னை நீயே இரண்டாய் வகுத்து
ஒன்றில் தொலைந்து
இன்னொன்றில் தேடியபடியே
தான் ஒரு மனநோயாளி இல்லையென்பதையும்
எழுத்துக்களால் பலப்படுத்துகிறாய்
இருமுனைகூர்மையின் மத்தியில்
பாலே நாட்டியமாடும் ஊனமுற்ற
ஒரே பெண் நீ ………..

***

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024