INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, October 5, 2025

RAMESH PREDAN

SIX POEMS BY

RAMESH PREDAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


2.SINGULAR PLURAL

No matter wherever I wander
Am not able to go past the ocean
In the speed with which the hart expands
The world has shrunk and narrowed down.
While rolling to the other side and lying
The waves of the right and left sides soak the legs.
Lying huddled in the planet born to live
Is against the kinematics law.
Being contained is against the nature of animate things.
Should leave from here
along the path stretching in dream
to an alien planet.
Who would come with me?
For travel expenses a handful of Tamil words that are in vogue
The desire to become a god
that surpasses the volume of heart _
These we can share equally among us
on the way they would fix us somewhere.
Thirsting after freedom
would offer Fear of Death
Life
is not to be walked on foot
It is to spread the hands and fly
Who would come with me?
Not being crouched singly
Liberty is but blooming plurally.

ஒருமை பன்மை
எங்கே சுற்றித் திரிந்தாலும்
கடலைத் தாண்டமுடியவில்லை
மனம் விரிவடையும் வேகத்தில்
புவி சுருங்கிச் சிறுத்துவிட்டது
புரண்டுப் படுக்கும்போது
வல இடப் பக்கங்களின் அலைகள் கால்களை நனைகின்றன
வாழப்பிறந்தக் கோளகையில் முடங்குவது
பொருள் இயங்கியல் விதிக்கு முரணானது
அடைபடுவது உயர்திணைப் பண்புக்கு எதிரானது
இங்கிருந்து வெளியேற வேண்டும்
கனவில் வளரும் புதிய பாதையில்
அயல் கோளகம் நோக்கி
உடன் யார் வருவீர்?
பயணச் செலவிற்கு என்னிடம்
புழக்கத்திலிருக்கும் கைப்பிடியளவு
தமிழ்ச் சொற்கள்
மனத்துக் கொள்ளளவில் அடங்காத
கடவுளாகும் ஆசை
இவற்றை ஆளுக்குக் கொஞ்சம் சரியாகப் பகிர்ந்துகொள்ளலாம்
போகும் வழியில் எங்காவது ஓரிடத்தில்
இவை நம்மைப் பொருத்திவிடும்
விடுதலையை இச்சிப்பது
மரணபயத்தைத் தரும்
வாழ்க்கை
கால்களால் நடப்பதற்கில்லை
கைகளை விரித்துப் பறப்பதற்கு
என்னோடு யார் வருவீர்?
ஒருமையில் ஒடுங்குதலில் அன்று
பன்மையில் விகசிப்பதே விடுதலை.
ரமேஷ் பிரேதன்






3
So there happened such a miracle
Once in every ten years
Someone would be born to read me
In intelligence, clarity, shape and language
He would be exactly like the other one
Would be born with gender change also
As the reader goes on reading me
I would be born in him anew as man and woman.
In the own body living in the text
There is no usage of language with exclusive
gender- orientation
Inside the Text that wears the gender of the respective readers
the death o f the writer takes place
depending on the reader
There is nothing called the Death of Text
Death of writer is fictitious
All those being alive in fiction
are but natural beyond Being – Non-Being
I speak the truth, O beings of this Planet
The reader alone dies
Reader’s Text is but the absurdity of reading
with the ‘First Person Self that each time taking me,
touching me and opening me
forcibly squeezing itself and so filling me
to the brim
Created once upon a time
and eventually ceased to be and became
sublimated in people’s memory
And, for ages till date
the book of lone book creator
I hid myself inside the text
At the ultimate end where the fiction goes beyond the text
Text and myself alone remained.
Ramesh Predan

(* ஒரு வாசகராக ஒன்றிரண்டு இடங்களில் மொழிபெயர்ப்பு எனக்கு நிறைவைத் தரவில்லை - லதா ராமகிருஷ்ணன்)

அப்படித் தானோர் அதிசயம் நிகழ்ந்தது
ஒவ்வொரு பத்து ஆண்டுக் கொருமுறை
என்னைப் படிக்க ஒருவர் பிறப்பார்
அறிவில் தெளிவில் உருவில் மொழியில்
அவரைப் போலவே இவரும் இருப்பார்
பாலில் வேறாய் மாறியும் பிறப்பார்
படிக்கப் படிக்க அவரில் நானே
ஆணாய் பெண்ணாய் புதிதாய் பிறப்பேன்;
பிரதியில் வாழும் சொந்த உடம்பில்
தனித்த பால்நிலை செயல்படும் மொழிதல்
இல்லை; படிப்பவர் பாலை உடுத்தும்;
பிரதிக் குள்ளே ஆக்கியோர் மரணம்
வாசிப் பவரைப் பொறுத்தே அமையும்;
பிரதியின் மரணம் என்பது இல்லை
ஆக்கியோர் மரணம் என்பது புனைவு;
புனைவில் வாழும் உயிர்கள் எல்லாம்
இன்மை இருப்பு கடந்த இயல்பு;
உண்மை உரைப்பேன் உலகத் தீரே
வாசகர் மட்டுமே மரணிக் கின்றார்.
ஒவ்வொரு முறையும் என்னை எடுத்து
தொட்டுப் பிரித்துப் படிக்கும் தன்னிலை
தன்னைத் திணித்து என்னை நிறைக்கும்
வாசிப் பபத்தம்: வாசகப் பனுவல்.
என்றோ படைத்தேன் செத்தேன் மனிதர்
நினைவில் பதங்க மானேன்; நிற்க,
காலங் காலமாய் மொழியில் நிலைத்தது
ஒற்றைப் பிரதி: படைத்தவர் பனுவல்.
பிரதிக் குள்ளே பதுங்கிக் கொண்டேன்
பிரதியைப் புனைவு கடக்கும் இறுதியில்
நானும் பிரதியும் மட்டும் மீந்தோம்.

4. DEATH OF WORDS
Noise uproarious outside
Opening the wall I looked
One and all were running towards the Sea.
Stopping one I asked.
“The Sea is missing, it seems” said he and ran away.
In clusters and crowds they were returning.
From that day onwards
their speech became devoid of Sea.
In course of Time
the word Sea became extinct in language
Just as going on a picnic in search of waterfalls
They journeyed towards the West to view the sea.
In the East where the Sea was
Sand in waves
Was swaying, spreading far and wide..
At the topmost cross-pole
of the mast buried
Birds searching for the sea
came and sat
one after another
new and different
with their wings fatigued
For retrieving things gone
Time would never move backward
This law of physics
None including myself
Told the birds.
With the passage of Time
the word Seabird too
ceased to be in Language.
Thus
In order to defer my Death
I count

(*SECOND ENGLISH TRANSLATION)

DEATH OF WORDS


Noise uproarious outside
Opening the wall I looked
One and all were running towards the Sea.
Stopping one I asked.
“The Sea is missing, it seems” said he and ran away.
In clusters and crowds they were returning.
From that day onwards
their speech became devoid of Sea.
In course of Time
the word Sea became extinct in language
Just as going on a picnic in search of waterfalls
They journeyed towards the West to view the sea.
In the East where the Sea was
Sand in waves
Was swaying, spreading far and wide..
At the topmost cross-pole
of the mast buried
Birds searching for the sea
came and sat
one after another
new and different
with their wings fatigued
For retrieving things gone
Time would never move backward
This law of physics
None including myself
Told the birds.
With the passage of Time
the word Seabird too
ceased to be in Language.
Thus
In order to defer my Death
I count
The Deaths of Words

சொற்களின் மரணம்

வெளியே இரைச்சல்
சுவரைத் திறந்து பார்த்தேன்
எல்லோரும் கடலை நோக்கி
ஓடிக்கொண்டிருந்தனர்
ஒருவரை நிறுத்திக் கேட்டேன்
'கடலைக் காணவில்லையாம்'
சொல்லிவிட்டு ஓடினார்
கூட்டம் கூட்டமாகத் திரும்பிக்கொண்டிருந்தனர்
அன்றிலிருந்து அவர்கள் பேச்சில்
கடல் அற்றுப்போனது
காலப்போக்கில் மொழியில்
கடல் என்ற சொல்லும் வழக்கொழிந்தது
அருவியைத் தேடி சுற்றுலா போவதுபோல கடலைப் பார்க்க
மேற்கில் பயணப்பட்டனர்
கடலிருந்த கிழக்கில்
அலையலையாய் மணல்
பரந்து விரிந்து அசைந்துகொண்டிருந்தது
புதைந்த பாய்மரக் கம்பத்தின்
உச்சிக் குறுக்குக் கழியில்
கடலைத் தேடும் பறவைகள்
புதிதுபுதிதாய் நாள்தோறும்
சிறகுகள் ஓய வந்தமர்ந்தன
தொலைந்ததை மீட்டெடுக்க
ஒருபோதும் கால இயக்கம்
பின்திரும்பாது என்ற இயல்விதியை
என்னையும் சேர்த்து யாரும்
பறவைகளுக்குச் சொல்லவில்லை
காலப்போக்கில் கடலைத் தொடர்ந்து
கடற்பறவை என்ற சொல்லும்
மொழியில் வழக்கொழிந்தது
இப்படியாக
எனது மரணத்தைத் தள்ளிப்போட
சொற்களின் மரணத்தைக்
கணக்கிடுகிறேன்.
ரமேஷ் பிரேதன்



சொற்களின் மரணம்
வெளியே இரைச்சல்
சுவரைத் திறந்து பார்த்தேன்
எல்லோரும் கடலை நோக்கி
ஓடிக்கொண்டிருந்தனர்
ஒருவரை நிறுத்திக் கேட்டேன்
'கடலைக் காணவில்லையாம்'
சொல்லிவிட்டு ஓடினார்
கூட்டம் கூட்டமாகத் திரும்பிக்கொண்டிருந்தனர்
அன்றிலிருந்து அவர்கள் பேச்சில்
கடல் அற்றுப்போனது
காலப்போக்கில் மொழியில்
கடல் என்ற சொல்லும் வழக்கொழிந்தது
அருவியைத் தேடி சுற்றுலா போவதுபோல கடலைப் பார்க்க
மேற்கில் பயணப்பட்டனர்
கடலிருந்த கிழக்கில்
அலையலையாய் மணல்
பரந்து விரிந்து அசைந்துகொண்டிருந்தது
புதைந்த பாய்மரக் கம்பத்தின்
உச்சிக் குறுக்குக் கழியில்
கடலைத் தேடும் பறவைகள்
புதிதுபுதிதாய் நாள்தோறும்
சிறகுகள் ஓய வந்தமர்ந்தன
தொலைந்ததை மீட்டெடுக்க
ஒருபோதும் கால இயக்கம்
பின்திரும்பாது என்ற இயல்விதியை
என்னையும் சேர்த்து யாரும்
பறவைகளுக்குச் சொல்லவில்லை
காலப்போக்கில் கடலைத் தொடர்ந்து
கடற்பறவை என்ற சொல்லும்
மொழியில் வழக்கொழிந்தது
இப்படியாக
எனது மரணத்தைத் தள்ளிப்போட
சொற்களின் மரணத்தைக்
கணக்கிடுகிறேன்.
ரமேஷ் பிரேதன்

5. WORLD INVERTED

White Darkness
Dark Light so
Practice saying the other way
All that you know
would turn topsy-turvy.
At the time when stars surface
Flowers drop
Sun rolling between sky and earth
glows and extinguishes
Though it is she who teaches all these
She reveals herself as He only.
He or She
With words they change their genders
I practiced saying that the sun that goes
from East to West is
going from south to North
I felt changes taking place in my body.
I become free from containing myself
inside one’s knowing
In turning upside down
I construct myself for my own self.
One day as my own Man
One day as my own Woman
I construct myself changing so
This is a kind of game
Played with words on my person
Called ‘Sol-Mei’ Game.
When you see me and stand there
Flabbergasted to the core
I go past with a laugh at you
Dear Pal.
தலைக்கீழுலகம்
வெள்ளை இருட்டு
கருப்பு வெளிச்சம் என
மாற்றிச் சொல்லிப் பழகுங்கள்
அறிந்தவை எல்லாம்
தலைக்கீழாய் மாறும்
உடுக்கள் முளைக்கும் பொழுதில்
பூக்கள் உதிர்கின்றன
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில்
உருளும் பரிதி எரிந்து அணைகிறது
இப்படியெல்லாம் சொல்லிச் செல்வது அவளாக இருந்தாலும்
அவனாகத்தான் தன்னை
வெளிப்படுத்திக்கொள்கிறாள்
அவனோ அவளோ
சொற்களால் பாலை மாற்றிக்கொள்கிறார்
கிழக்கிலிருந்து மேற்கிற்குச் செல்லும் பரிதியை
தெற்கிலிருந்து வடக்கிற்குச் செல்வதாக
சொல்லிப் பழகினேன்
உடம்பில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன்
ஒருவரின் அறிதலுக்குள்
என்னை அடக்குவதிலிருந்து விடுதலையாகிறேன்
தலைக்கீழ் மாற்றத்தில்
என்னை எனக்காகக் கட்டமைத்துக்கொள்கிறேன்
ஒருநாள் எனக்கானவனாகவும்
மறுநாள் எனக்கானவளாகவும்
என்னை மாற்றி மாற்றி அமைத்துக்கொள்கிறேன்
இது மொழியால் என் உடம்பில் விளையாடும் ஒருவித
சொல்மெய் விளையாட்டு
நீ என்னைக் கண்டு
குழம்பி நிற்கும்போது
உன்னை நகைத்துக் கடக்கிறேன் நண்பா.

6.FULL STOP
A full stop
growing as a dot
becomes a wholesome circle
In the circle so formed
a sentence too grows
without coming to a close.
Not presenting another entity
the blank language turns its own self
into a representation.
In order to move the full stop in a different spot
the words with barriers removed
multiplying in themselves
the sentence grows up
Word becomes a name and never
a meaning
The true meaning that resonates
becomes the essence of life
Full stop confines it.
It is the sentence sans barrier
that constructs Freedom
the full stop affirms
a meaning being contained in language.
When the dot grows and turns into a circle
the sentence confined in that circle
banging against the rim
breaks it open.
The word Freedom
is a sentence
incomplete in itself.

□ முற்றுப்புள்ளி
ஒரு முற்றுப்புள்ளி
புள்ளியாகவே வளர்ந்து
நிறைவட்டமாகிறது
உருப்பெருகும் வட்டத்திற்குள்
ஒரு வாக்கியம்
முற்றுப்பெறாமல் தானும் வளர்கிறது
வேறொரு பொருளைக் காட்சிப்படுத்தாமல்
வெற்று மொழி தன்னைத் தானே
படிமமாக்குகிறது
வேறோரிடத்திலிருந்த
முற்றுப்பள்ளியை நகர்த்தத்
தடை அகற்றப்பட்ட சொற்கள்
தம்மில் தாம் பெருகி
வாக்கியம் வளர்கிறது
சொல் ஒருபோதும்
பெயராவதன்றி பொருளாவதில்லை
ஒலிக்கும் மெய்ப்பொருள்
உயிர்ப்பொருளாகிறது
முற்றுப்புள்ளி அதை கட்டுப்படுத்துகிறது
தடைபடாத வாக்கியமே
விடுதலையைக் கட்டமைக்கிறது
ஒரு பொருள் மொழிக்குள் அடங்குவதை
முற்றுப்புள்ளி உறுதிபடுத்துகிறது
புள்ளி வளர்ந்து வட்டமாகும்போது
அந்த வட்டத்துக்குள் அடைபட்ட வாக்கியம்
விளிம்பை முட்டித் தகர்க்கிறது
விடுதலை என்ற ஒரு சொல்
தன்னளவில் முற்றுப்பெறாத
ஒரு வாக்கியம்.
ரமேஷ் பிரேதன்

PALANI BHARATHI

 THREE POEMS BY

PALANI BHARATHI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)



1.THE TALE OF STORYTELLERS

Beware of Storytellers
If you begin to listen saying ‘Mmm’
They would begin to tell your tale
to your own self
‘It was dark in the primordial days’
So they would commence
As if they existed even prior to those days
Deadlier than the tongue of Kolkatta Kaali
who knows the taste of ‘sacrifice’
- The tongues of the Storytellers.
Licking our ears incessantly
turning us slaves to the luxury of listening
- These Storytellers are Vetals that
being unaware of the strength of
Vikramadhityans’ shoulder
and in the fear of head exploding
have made listening to tales
severe punishments
They are those who
telling Avvai to be in Moon
have chased her away
from Planet Earth
They are those
who have earned the curse of the hapless crows
accused of stealing Vadas
Crows cawing in front of
each and every house
are not announcing about the arrival of visitors...
they are cautioning you
about the visit of some Storytellers
Soothsayer
Fortune teller
Saamiyaadi
One and all
are but representatives of
Storytellers
In Theatre
Bus
Train
If you fear for your life -
keep your ears closed.
He who sits next to us
could be closely watching our ears
Just as Van Gogh
who had sliced his own ears
I would somehow getaway.
It could be that
even with the help of this poem
they would pierce and
come to thee.
Beware of Storytellers.
So you be..
கவனமாய் இருங்கள்
கதைசொல்லிகளிடம்
'ம்' கொட்ட ஆரம்பித்தால்
உங்கள் கதையை
உங்களுக்கே
சொல்லத் தொடங்குவார்கள்
'ஆதியில் இருளாயிருந்தது' என்று
அதற்கும் முன்னால்
வாழ்ந்தவர்கள்போல
ஆரம்பிப்பார்கள்
பலிருசி அறிந்த
கொல்கத்தா காளியின் நாக்கைவிட
பயங்கரமானவை
கதைசொல்லிகளின் நாக்குகள்
நம் காதுகளை
நக்கி நக்கி
கேட்கும் சுகத்துக்கு
நம்மை மண்டியிட வைத்துவிடும்
கதைசொல்லிகள்
விக்ரமாதித்யன்களின்
தோள்வலி அறியாமல்
தலை வெடித்துவிடும் பயத்தினூடே
கதைகேட்பதை
தண்டனைகளாக்கிவிட்ட
வேதாளங்கள்
அவ்வை
நிலாவில் இருப்பதாய்ச் சொல்லி
அவளை
பூமியிலிருந்தே துரத்திவிட்டவர்கள்
வடை திருடியதாய்
திருட்டுக்குற்றம் சுமத்தப்பட்ட
அப்பாவிக் காகங்களின்
சாபத்திற்கு உள்ளானவர்கள்
ஒவ்வொரு வீட்டின் முன்னும்
காகங்கள் கரைவது
விருந்தாளிகள் வரக்கூடும் என்கிற
அறிவிப்பல்ல...
யாராவது
கதைசொல்லிகள் வந்துவிடக்கூடும்
என்கிற எச்சரிக்கைதான்
குடுகுடுப்பைக்காரன்
ஜோசியக்காரன்
சாமியாடி
எல்லோரும்
கதைசொல்லிகளின்
பிரதிநிதிகள்தாம்
திரையரங்கில்
பேருந்தில்
தொடர்வண்டியில்
உயிரச்சம் இருந்தால்
மூடி வையுங்கள்
உங்கள் காதுகளை
நமக்குப் பக்கத்தில் உட்காருகிறவன்
நம் காதுகளையே
நோட்டமிடுகிறவனாக இருக்கலாம்
தன் காதுகளைத்
தானே அறுத்துக்கொண்ட
வான்காவைப் போல
நான் தப்பித்துவிடுவேன்
ஒருவேளை
இந்தக் கவிதையின் மூலமாகக்கூட
அவர்கள் ஊடுருவி வரலாம்
உங்களிடம்
கவனமாய் இருங்கள்
கதை சொல்லிகளிடம்


(2)


At this untimely hour
Am unable to write anything, for sure
For the sparrow
that stands in pain and angst
on the thorny fence
I give my words to eat.
Leaving its bitter land
it comes to sit in my palm.
Just as the pen-tip
bending and rising
for pecking at the words
and quenching its hunger
As a branch it got so used
extends
My Line Unwritten.

இந்த அகாலத்தில்
இப்பொழுது என்னால்
எழுத முடியாது
வலியும் வேதனையுமாக
முள்வேலியில்
வெறித்து நிற்கும்
சிட்டுக்குருவிக்கு
எனது சொற்களை
உண்ணக் கொடுக்கிறேன்
அது தன்
கசந்த நிலத்திலிருந்து
என் உள்ளங்கையில்
வந்தமர்கிறது
குனிந்து நிமிரும்
பேனாமுனைபோல
சொற்களைக் கொத்திக் கொத்திப்
பசியாற
அது பழகிய
ஒரு மரக்கிளையாக நீள்கிறது
எழுதாத என் வரி


(3)



Always
All
are being pursued by
the kiss of an affection
It can be a flower
discarded by thee
It can be a fragrance
that crossed thee
A star beyond your reach
A word you hesitated to hear
The droplet splashing on your nudity
and stationed there
reflecting in the bathroom mirror.
A footprint contained within the line
drawn by some the unknown ‘who’
between the two.
The language of kisses
being nothing but the kiss
is its anguish.

எல்லோரையும்
எப்போதும்
ஒரு பிரியத்தின் முத்தம்
பின்தொடர்கிறது
அது
உங்களால் புறக்கணிக்கப்பட்ட
ஒரு பூவாக இருக்கலாம்
உங்களைக் கடந்து போன
ஒரு நறுமணமாக இருக்கலாம்
உங்களுக்கு எட்டாத ஒரு
நட்சத்திரமாக இருக்கலாம்
நீங்கள் கேட்கத் தயங்கிய
ஒரு வார்த்தையாக இருக்கலாம்
குளியலறைக் கண்ணாடியில்
உங்கள் நிர்வாணத்தின் மீது
தெறித்து நிற்கும்
ஒரு துளியாக இருக்கலாம்
இருவருக்குமிடையில்
யாரோ கிழித்த கோட்டை
தாண்ட முடியாத
ஒரு சுவடாக இருக்கலாம்
முத்தங்களின் மொழி
முத்தமாகவே இருப்பதுதான்
அதன் துயரம்


INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS