INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 1, 2025

LARK BASKARAN

 INSIGHT OCT-NOV, 2025

TWO POEMS BY

LARK BASKARAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


1. ACTION – CUT
This is not a scene
A true-to-life Trailer
I think of those who
Drew my face in Facebook
The dream that on a night sans heat
reclining in a plastic chair
with a cup of tea
has changed just as an Ad-shape
for the sake of customer
so I feel
in the street-lights of those nights
with no bus in the vicinity
the scenes of the inner screen
twinkling and sparkling again and again
repose
“For how many more years?_
For all those asking thus
I have got used to stand like a
temporary’ wrapper design.
Among the designs that I have been doing
for twenty long years
Or books
Might be to your liking.
But
In each one of them
the scenes I have chosen
for the big screen
should without fail demand your attention
Friends, comrades
Cinematographers, producers
All are
Characters I have left unnamed
Their wishes
The sound track of the movie
The BGM of the Art of Living.
In the night with
Dream’s virility
turns me overburdened
Another life that remains by my side
awaits for the same success
with the same heat and passion
Not contended with starting somewhere
in each and everything
each of us holding aloft one’s own dreams
and so march ahead
Walking in the Chennai Night
we survive
In the coming year
Till the sound of those words
Action – Cut is heard
Till we stand in the shade of Success
this long scene would go on
like the calm before the movie begins

ஆக்ஷன் கட்
_ லார்க் பாஸ்கரன்
—--------------------
இது காட்சி அல்ல
வாழ்வியல் வடிவம் கொண்ட டிரெய்லர்
முகப்புத்தகத்தில்
என் முகத்தை ஓவியமாக வரைந்தவர்களை
நினைத்துக் கொள்கிறேன்.
சாலிகிராமத்தில்
வெப்பமில்லாத இரவில்
தேநீர்க் கோப்பையோடு
பிளாஸ்டிக் நாற்காலியில் சாய்ந்திருந்த கனவு
விளம்பர வடிவம் போல
வாடிக்கையாளருக்காக
மாற்றப்பட்டதாக உணர்கிறேன்
வடபழனி பாலத்தின் கீழ்
பேருந்து வராத இரவுகளின்
மின்விளக்குகளில்
மின்னி மின்னி
ஓய்வெடுக்கின்றன
மனத்திரையின் காட்சிகள்
இன்னும் எத்தனை வருடம்
என்று கேட்கும் ஒவ்வொருவரின் முன்பும்
தற்காலிக
அட்டைப்படமாக நிற்கப் பழகியிருக்கிறேன்
இருபது வருடங்களாக
செய்யும்
வடிவமைப்புகளுக்குள்
சினிமா போஸ்டர்களோ
புத்தகங்களோ
உங்களைக் கவரலாம்
ஆனால்
ஒவ்வொன்றிலும்
திரைக்காக நான்
தேர்வு செய்த
காட்சிகளைக் கவனிக்கத் தவறவிடாதீர்கள்
நண்பர்கள், தோழர்கள்,
ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பாளர்கள்
அனைவரும்
நான் பெயரிடாத கதாபாத்திரங்களே
அவர்களின் வாழ்த்துகள்
திரைப்படத்தின் ஒலி வடிவம்
வாழ்வியலின் பி.ஜி.எம்.
கனவின் வீரியம்
சுமையைக் கூட்டும் இரவில்
உடன் இருக்கும் ஓர் உயிர்
எனது வெற்றிக்காக
அதே வெப்பத்தோடு
காத்திருக்கிறது
ஏதோ ஒன்றில் தொடங்கினோம்
என்றில்லாமல்
எல்லாவற்றிலும் அவரவர்
கனவுகளை ஏந்திக் கொண்டு
சென்னையின் இரவில் நடந்து கொண்டே வாழ்கிறோம்
வரும் ஆண்டு
ஆக்ஷன் கட் சொல்லும் சத்தம்
கேட்கும் வரை
வெற்றியின் நிழலில் நிற்கும்வரை
இந்த நீண்ட காட்சி தொடரும்
படம் தொடங்கும் முன் உள்ள
அமைதியைப் போல

.
-லார்க் பாஸ்கரன்-


(2)
PRICE-TAG OF A WRAPPER DESIGNER

A day’s income
Involves wakeful hours of many a night
The artist who hides his eyes and face that fall
a prey to light
Forget his name by and by.
In order to fulfil others’ dreams
His finger nerves curling and coiling
Turn taut and frozen
Time and again.
Three thousand wrappers in six years
Is not the essence of it
It means that he has drawn the dreams of others
three thousand times
in his own eyes.
For he who has a bent spine
In order to feed the eyes
and to turn alive dreams
The remuneration is just
Thousand
Two Thousand
If asks for more
Why begging, O artist – They
ask
Despite being aware of the difference
between appreciation wholesome
and the pretense of brushing aside
with no response whatsoever
he remains mum.
Though sans hues
There is hope
He feels so
Designs
Fonts
His shadows
That which has never been said in the open
Time makes him do so now
Somehow
He who bargains and purchases paying the due cost
for art and artist
raises his salary
This is not an announcement
This is an artist’s redemption
He starts waiting
Will anyone
Just as the wrapper design
open and view
his rate and worth too


அட்டைப்படக் கலைஞனின் விலைப்பட்டியல்
—---------------------------------------
ஒரு நாள் சம்பளம் என்பது
பல இரவுகளின் விழிப்புகள்
ஒளிக்கு பலியாகும்
கண்களையும்
முகத்தையும் மறைக்கும் கலைஞன்
படிப்படியாகத் தன்
பெயரை
மறக்கிறான்
பிறரின் கனவுகளுக்காக
விரல் நரம்புகள்
சுருளச் சுருள
ஓயாத இறுக்கம்
ஆறு வருடங்கள்
மூன்று ஆயிரம் அட்டைகள் என்பதல்ல பொருள்
பிறர் கனவுகளை மூன்றாயிரம் முறை தன் கண்களில்
ஏற்றி வரைந்திருக்கிறான்
கண்களுக்குத் தீனியிட
கனவுகளுக்கு
உயிர்கொடுக்கவென
முதுகுத்தண்டு வளைந்தவனின்
கூலி
ஆயிரம்
இரண்டாயிரம்
அதற்கு மேல் கேட்கும்போது
பிச்சை எடுக்கிறாயா கலைஞனே என்கிறார்கள்
பாராட்டிலும்
பதிலே சொல்லாமல்
புறக்கணிக்கும்
பாசாங்கிலும்
வேறுபாடுகள் அறிந்தும்
மௌனமாக இருக்கிறான்
நிறங்கள் இல்லாதிருந்தாலும்
நம்பிக்கை இருப்பதாக
நினைக்கிறான்
வடிவமைப்புகள்
எழுத்துருக்கள்
அவன் நிழல்கள்
பொதுவெளியில் இதுவரை சொல்லாததை
இம்முறை சொல்ல வைக்கிறது காலம்
கலையையும் கலைஞனையும் விலைபேசி வாங்குபவன்
தன் சம்பளத்தை உயர்த்துகிறான்
இது அறிவிப்பு அல்ல
கலைஞனின் மீட்பு
உழைப்பை கைப்பற்றும்
அரசியல்
காத்திருக்கத் தொடங்குகிறான்
அட்டைப்படம் போலவே
தனது மதிப்பை யாராவது
திறந்துப் பார்ப்பார்களா..
-லார்க் பாஸ்கரன்-

KUGAI MA PUGAZHENDHI

 INSIGHT OCT-NOV, 2025

TWO POEMS BY

KUGAI MA PUGAZHENDHI


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


They have kept him confined in aloneness
But he has made all those lying cramped
inside his aloneness
stir up and happily wander
across the length and breadth of the room-wall
All are humans like him
When he would be all alone in the room
They would descend from the wall
and converse with him so casually
But when the eerie sound of someone approaching
is heard
They would again turn frozen in the wall
All over the room their presence
Those confined in aloneness
conversing in absolute silence.
எல்லோரும் அவனை தனிமையில்
பூட்டிவைத்திருந்தனர்
அவனோ தன் தனிமைக்குள் நெரிசலாய் அடைந்து கிடந்தவர்களை அறையின் சுவர் முழுக்க வரைந்து உலவ விட்டிருந்தான்
எல்லோருமே அவனைப் போன்ற மனிதர்கள்
அவன் மட்டும் அறையில் தனித்திருக்கையில்
சுவரிலிருந்து இறங்கி வந்து அவனோடு மிக இயல்பாய் உரையாடிக் கொண்டிருப்பவர்கள்
யாரேனும் வரும் அசரீரி கேட்டால்
மறுபடி சுவரில் உறைந்துவிடுபவர்கள்
அறை முழுவதும் இப்போது
தனிமையில் உரையாடுபவர்கள்
துளி சப்தமும் வராமல்

குகை மா.புகழேந்தி


(2)



In a drop of affection
someone has mixed a droplet of poison
But I have gulped it
with all the love in the world
See the result of it.
Nothing has happened to me
who has drunk that venom-mixed affection
Instead of me
drinking that poison mixed with it
and not mixing it in the body that has
gulped it
Affection alone ceased to be.
Affection remains as affection
all over
Even on the throes of death,
For sure.

அன்பின் துளியில்
யாரோ
மீத்துளி
நஞ்சைக் கலந்துவிட்டார்கள்
நானோ அன்பென்னும் பேரன்பில் அருந்திவிட்டேன் அதை
முடிவைப் பாருங்கள்
நஞ்சு கலந்த அன்பைப் பருகிவிட்ட எனக்கோ ஒன்றுமில்லை
எனக்குப் பதிலாக
தன்னுடன் கலந்த நஞ்சை
தான் பருகி
தன்னைப் பருகிய உடலில் அதை கலக்காமல்
தான் மட்டும் இறந்து போயிற்று அன்பு
அன்பென்பது
எங்கும் அன்பாகவே இருக்கிறது
மரணத் தருவாயிலும்.


ZEENAT

INSIGHT -  OCT-NOV, 2025

A POEM BY


ZEENAT 

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Why do we trespass into those
frontiers
drawn and defined by each one of us
for our own selves -
straining and contracting
the doors of windows
that each of us have willingly shut
why at all we strive
to open them all
causing sickening uproar
Each one’s meditations deep down
The all too rare moments that they gift one
Why at all we attempt to
penetrate and
wreck it all
The serene peace
that the stream deep down
brings along
can never be given
by any wave at the shore
_ O, why at all we keep forgetting
This simple truth
all along

குறுக்கீட்டுக் கலாசாரம்
அவரவர்க்கென
அவரவர்
வரைந்த
எல்லைக் கோட்டுக்குள்ளே
நாமேன்
அத்துமீறிக்
குறுகிப்
போகிறோம்
அவரவர்
விரும்பிச் சாத்திய
சாளரக் கதவுகளை
நாமேன்
பேரிரைச்சலாய்
திறக்க
முயல்கிறோம்
அவரவர்க்குரிய
அகத்தியானங்களை..
அது
அவர்களுக்காய்
பரிசளிக்கும்
அவ்வற்புதக் கணங்களை
நாமேன்
ஊடுருவிச்
சிதைக்க முனைகிறோம்
அடியாழ நீரோட்டம்
தன்னுள்
தாங்கி வரும்
சலனமற்ற பேரமைதியை
எந்தக்
கரையலையினாலும்
தந்துவிட முடியாதென்பதை
மறுபடியும்
மறுபடியுமாய்..
நாமேன்
மறந்தே போகிறோம்

ஸீனத்

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

INSIGHT - OCT-NOV, 2025


TWO POEMS BY

THIRUGNANASAMPANTHAN LALITHAKOPAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

1.LARGE FISH
Seagulls go past
above
the body embedded as salt
I stare at the sea
lying a little away
Like a stork I wait for
time to ripen
when needs take the form of fish
the large fish to become a carcass
and the entire sea turning into
a pyramid of salt.

உறுமீன்கள்
உப்பென படிந்திருக்கும்
உடலின் மேலால்
கடற்காக்கைகள் கடந்து
செல்கின்றன
சற்றே தள்ளி தனியானாய்
படுத்திருக்கும் கடலை வெறிக்கிறேன் ;
தேவைகளின் வடிவம் மீனென
கனியும் காலத்திற்காய்
கொக்கென காத்திருக்கிறேன்
உறுமீன்கள் பிணமாவதற்கும்
கடலே உப்பின் "பிரமிடாய்"
உருமாறவும்.

-லலித்தா

(2)


She loved words, said she
Saying that words are filled with
humaneness alone
She turned her poems
testimonies.
On a day when summer lay spread
far and wide
I went around searching for grass
to my cow
When I begged for the grass sprouted
in her poem
The lone door for entering
into the poem
banged shut.
Thirugnanasampanthan Lalithakopan

சொற்களை நேசிப்பதாக
கூறினாள்
சொற்களுக்குள் மனிதம்
மட்டுமே இருப்பதாக
கூறியவள்
தனது கவிதைகளை
சாட்சியமாக்கினாள்.
கோடை விரிந்திருந்த
நாளொன்றில்
என் பசுவுக்கான புல்லை
தேடியலைகிறேன்
அவளின் கவிதையில்
முளைத்திருக்கும் புல்லை
இரந்து கேட்ட நாளிலே
கவிதைக்குள் நுழைவதற்கான
ஒரேயொரு கதவும்
மூடப்பட்டது.
-லலித்தா-

VIDYA MANOGAR

 INSIGHT OCT-NOV, 2025

A POEM BY


VIDYA MANOGAR


Rendered in English by Latha Ramakrishnan(First Draft)


Words soft and soothing
as the warmth of raw milk
I safeguard
On a day when I win your love
should give away all the words I have
and
go beyond.
Before that
I should converse a lot
now itself
whose twigs
broken beforehand
in anticipation of summer
with hands acutely aching
have nonetheless sprouted
The beauty of they blooming
tomorrow -
Suffice to watch
from a distance

கறந்த பாலின்
இளஞ்சூட்டின்
இதம்போலவே
பதமான
சொற்களை
நான்
பத்திரப்படுத்துகிறேன்....
உங்கள்
அன்பிற்குப்
பாத்திரமாகும்
ஒருநாளில்
கைவசமிருக்கும்
சொற்களைக்
கையளித்துவிட்டு
கடந்துபோக வேண்டும்.....
அதற்குமுன்
கோடை வருமென்று
முன்கூட்டியே
வலிக்க வலிக்க
ஒடித்துவிட்ட
குச்சிகள்
துளிர்த்திருக்கும்
இந்த
மல்லிகைச்
செடிகளோடு
நிறைய
பேச வேண்டும்
இப்போதே
பேசிவிட வேண்டும்
நாளை
அவை
பூத்துக்குலுங்கும்
அழகை
தூர நின்று
இரசிப்பதே
போதுமானது!.

வித்யா மனோகர்

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS