INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, December 1, 2025

ATHMAJIV

  INSIGHT OCT-NOV, 2025

A POEM BY 

ATHMAJIV

Rednered in English by Latha Ramakrishnan(*First Draft)

RIVER’S VOICE

Where goes this river?

I know not
For I am in the river.
Can’t dip my feet the second time
in the water
For the river halts not ever.
I don’t understand?
Nothing at all to comprehend
Suffice to float and keep moving
Suffice indeed.
Isn’t there any destination for the river?
That is the horror of an imagination
The river is always closeby.
How is that you can speak so incomprehensibl?
What I hear I repeat to thee parrot-like
For
I know nothing.
From whom you hear?””
From the river
Can the river speak? Does it speak?
Of course, it keeps speaking always
But as we keep speaking for ever
the river’s voice reaches us not; never.
I want to listen
Will you please teach me how to listen to it?
Very well.
If you want you can do so.
Burn your queries
Upon the river with answers widespread on it
just be seated.
Hearing queries from answers
is but just a habit.
Enough to you open your eyes and see
For
the river’s voice
can be heard by the eyes alone

நதியின்_குரல்
இந்த நதி எங்கே செல்கிறது?
எனக்கு தெரியாது
ஏனெனில்
நான் நதியில் இருக்கிறேன்.
இரண்டாம் முறை காலை
நனைக்க முடியாது
ஏனெனில்
நதி தங்குவதில்லை .
எனக்கு புரியவில்லையே?
புரிந்து கொள்ள எதுவுமில்லை.
மிதப்பதும் நகர்ந்தபடி இருப்பதும்
மிகப் போதுமானது.
நதிக்கு இலக்கு எதுவும் இல்லையா?
ஒரு கற்பனையின் விபரீதம் அது.
நதி எப்போதும் சமீபமாயிருக்கிறது.
எப்படி உன்னால் இப்படி
புரியாதபடி பேச முடிகிறது?
கேட்பதைதான் கிளிப்பி்ள்ளைபோல்
உன்னிடம் சொல்கிறேன் நான்.
ஏனெனில்
எனக்கு எதுவும் தெரியாது.
யாரிடமிருந்து கேட்கிறாய் நீ?
நதியிடமிருந்து...
நதி பேசுமா?!! பேசுகிறதா?!!
ஆமாம் ஆமாம்
நதி எப்போதும் பேசிக் கொண்டிருக்கிறது.
சதாசர்வமும்
நாம் பேசிக் கொண்டேயிருப்பதால்
நதியின் குரலை கேட்பதில்லை.
எனக்கும் கேட்பதற்கு ஆவலாயுள்ளது
கேட்பது எப்படி என சொல்லி தருகிறாயா?
மிகவும் மகிழ்ச்சி.
கேட்பதற்கு விரும்பினால் கேட்கலாம்.
உனது கேள்விகளை எரித்து விடு.
பதில்கள் பரவிக் கிடக்கும் நதிமீது
வெறுமனே அமர்ந்து கொள்.
பதில்களிடமிருந்து கேள்விகளை கேட்பது
ஒரு பழக்கம் மட்டுமே.
கண்களை திறந்து பார்த்தால் போதும்.
ஏனெனில்
நதியின் குரலை
கண்களால்தான் கேட்க முடியும்.

ஆத்மாஜீவ்

JEYANTHAN JESUDOSS

 INSIGHT OCT-NOV, 2025

A POEM BY

JEYANTHAN JESUDOSS



Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

 SILENCE IS MEDITATION’S THRESHOLD

Sharper than sword is Silence

When it is swung not blood

but emotions drip all over the battlefield.

When not speaking

The very glance turns into a poem

I write that

It is the translation of your silence

With words non-violent

We battled against each other

Victory belongs to thee.

Silence is the threshold of meditation

So you taught me

I copied silence from thee.

If the fool remains silent

He would be considered enlightened

So you baptized me

The world filled with noises

stands ennobled by your silence

Right from the first line of my poem

It is your silence that paves the words.

Never ever renounce Silence

It might end up as the death of a poet.

NOVA NADHI (Jeyanthan Jesudoss)

(I dedicate this poem to Ramesh Predan’s Silence)

 

மௌனம் என்பது தியானத்தின் வாசல்

ஒரு வாளை விடக் கூரியது மௌனம்

அது வீசப்படுகையில் குருதி அல்ல

படுகளத்தில் உணர்வுகள் சிந்துகின்றன.

பேசாத நேரத்தில்

பார்வையே கவிதையாக உருவெடுக்கிறது

அதை எழுதுகிறேன்

உன் மௌனத்தின் மொழிபெயர்ப்பு அது.

வன்முறையற்ற சொற்களால்

சமர்செய்கிறோம்

வெற்றி உன்வசமாகிறது.

மௌனம் என்பது தியானத்தின்

வாசல் என வகுப்பெடுத்தாய்

மௌனத்தை உன்னிடமிருந்து பிரதியெடுத்தேன்

முட்டாள் மௌனமாக இருந்தால்

ஞானியாகக் கருதப்படுவான்

என ஞானஸ்நானம் கொடுத்தாய்

சத்தங்களால் நிறைந்த உலகம்

உன் மௌனத்தால் மேன்மை பெறுகிறது.

என் கவிதையின் முதல் வரி தொடங்கி

உன் மௌனமே சொற்களைப் பாவுகிறது

ஒருபோதும் மௌனத்தை துறந்துவிடாதே

அது ஒரு கவிஞனின் மரணமாக முடிந்துவிடலாம்.

 

நோவா நதி

பின் குறிப்புஇக்கவிதையை Ramesh Predan

ரமேஷ் பிரேதனின் மௌனத்துக்குச் சமர்ப்பிக்கிறேன்.

 

MADUSAN SIVAN

 INSIGHT OCT-NOV, 2025

A POEM BY

MADUSAN SIVAN


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

Between my house and the adjacent street
There is no great distance
A big street cutting across
In that on one side
the street in which my house remains
The street branching out
on the opposite side
is the street adjacent
My house aligned in one Time zone
and the other in a different one
When the Sun burns there
I would be shivering in cold here
In our street when flowers would
wither and drop down
from plants creepers and trees
There leaves would begin to fall
When I chance to see that street
in the well of night
it would be all jubilant in radiance
People walking to and fro
and the wagons would keep moving
Birds would dash against and do a U-turn
They wouldn’t be knowing the street
having my house
There and here different Suns
Moon and Stars would be strolling
along the outer space.

என் வீட்டிற்கும் பக்கத்து தெருவிற்குமிடையில்
அவ்வளவாக தூரங்கள் இல்லை
குறுக்காக பிளக்கும் பெரும் தெரு
அதில் ஒரு பக்கமாக என் வீடு இருக்கும் தெரு
எதிர்புறமாக பிரிவது பக்கத்து தெரு
என் வீடு ஒரு காலத்திலும் அந்த தெரு வேறொரு காலத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது
அங்கு வெயில் எரிக்கையில்
நான் குளிரில் நடுங்கியபடி இருப்பேன்
எங்கள் தெருவில் செடிகளிலும் கொடிகளிலும்
மரங்களிலும் பூக்கள் பூக்கும் நாளில்
அங்கு இலைகள் உதிரத்தொடங்கும்
இங்கிருந்து அந்த தெருவை நடு இரவில் பார்க்க கிடைத்தால் வெளிச்சத்தில் கூதுகலித்திருக்கும்
அங்கும் இங்குமென நடப்பவர்களும்,வாகனங்களும் நகர்ந்தபடி இருக்கும்
பறவைகள் மோதி திரும்பிச்செல்லும்
எங்கள் வீடு இருக்கும் தெரு இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்காது
அங்கும் இங்கும் வேறு வேறு சூரியன்களும்
நிலவும் நட்சத்திரங்களும் வெளியில் உலாவும்
-மதுஷன் சிவன்



MARIMUTHU SIVAKUMAR

 INSIGHT OCT-NOV, 2025

A POEM BY 

MARIMUTHU SIVAKUMAR


Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

GOD’S PLAY

God wanted to stage a play
For acting in it
He searched for an actor
among the people
None dared to act in front of God
Seeing that among his creation
acting talent has waned
He bemoaned.
I seated there as a viewer
had a discussion with God about this
and arrived at a decision
I underlined all those
who gave us promises for centuries
God commanded me to bring them all
I brought them on the stage all set
And there began God’s Play in right earnest.

கடவுளின் நாடகம்
கடவுள் நாடகமொன்றை அரங்கேற்ற விரும்பினார்.
நடிப்பதற்காக மக்களிடத்தே
நடிகனை தேடினார்
எவருக்கும் கடவுள் முன் நடிக்க துணிவில்லை.
தன் படைப்பில்
நடிக்கும் ஆற்றல் பின்னடைவானதைக் கண்டு புலம்பினார்.
பார்வையாளனாக அமர்ந்திருந்த நான்
கடவுளிடம் இது பற்றி கலந்துரையாடி தீர்வுக்கு வந்தேன்.
நூற்றாண்டுகளாக எமக்கு வாக்குறுதிகள் தந்தவர்களை அடிக்கோடிட்டு காண்பித்தேன்.
அவர்களை அழைத்து வரும்படி கடவுள் கட்டளையிட்டார்.
தயார் நிலையில் இருந்த மேடைக்கு அவர்களை அழைத்து வந்தேன்.

இனி கடவுளின் ஆட்டம் ஆரம்பமானது.
~~~~~~~
மாரிமுத்து சிவகுமார்.

INSIGHT MARCH 2021

INSIGHT - OCT - NOV, 2025 - PARTICIPATING POETS