INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 7, 2026

SIVARASA KARUNAKARAN

A POEM BY
SIVARASA KARUNAKARAN

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)
We stand along the path of no-return
Such ‘no-return paths are there
With one and all
You need not feel sad Ji
No use regretting
If we expect that we would become
a laughing stock
But, we are not the Time’s Clowns – Are we?
The path and the direction we travelled along
were indeed new
So was the field of action
Along the new paths
A thousand crucifix
Crown of thorns many thousands.
Those days many dared not
to travel by our side
They huddled in the dark of pit
shrouded by fear and apprehension
Today
They have become Heroes of the
Era of Valour
holding sword made of cardboards
and performing on stage.
We can’t laugh nor feel sad
Thus History has always been _
Clownish, venomous
Forever Masked
Along the path of no-return
Caught in destiny’s narrow crevice
that allows not to move on
We are struggling, Ji ...
Let You and Me
mutually turn our worries into a ball
and play
‘This is the Game of Madness’
- Some might say.
O Yes! - One and all new traces
do belong to the crazy ones !

நாம் திரும்பிச் செல்லவே முடியாத பாதையில்தான் நிற்கிறோம்
திரும்பிச் செல்ல முடியாத பாதைகள்
எல்லோரிடமும் உண்டு
நீ வருத்தப்பட வேண்டியதில்லை ஜீ
வருத்தப்பட்டு ஆகப்போவது ஏதுமில்லை
அப்படி எதிர்பார்த்தால் அது பரிகசிப்பாகும்
நாம் காலக் கோமாளிகளல்லவே.
நாம் பயணித்த பாதையும் திசையும் புதிது
களமும் புதிது
புதிய பாதைகளில்
சிலுவைகள் ஆயிரம்
முள்முடிகள் பல்லாயிரம்
அன்றெல்லாம் நம்முடன் பயணிப்பதற்குப் பலரும் வரவில்லை
அச்சமும் தயக்கமும் சூழ்ந்த குழியின் இருளில் பதுங்கினர்.
இன்றோ
அவரெல்லாம்
வீர யுகத்தின் நாயகராகி
அட்டைக் கத்திகளோடு
அரங்கில் கூத்தாடுகின்றனர்
சிரிக்கவோ துக்கப்படவோ முடியாது நாம்
வரலாறு இப்படித்தான் கோமாளித்தனமாகவும்
வஞ்சகமாகவும் முகமூடியோடிருக்கிறது
திரும்பிச் செல்ல முடியா வழியில்
மேலும்
முன்னகர வழியற்ற விதியின் இடுக்கில்
திணறிக் கொண்டிருக்கிறோம் ஜீ
உன் துயரை நானும்
என் கவலைகளை நீயும்
ஒரு பந்தாக்கி விளையாடுவோம்
இது 'பைத்தியக்காரத்தனத்தின் விளையாட்டு' என்று யாரும் சொல்லக் கூடும்
புதிய சுவடுகள் எல்லாம்
பைத்தியங்களினுடைவையாகத்தானே உள்ளன!

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

KAVANUR SRINIVASAN

  A POEM BY KAVANUR SRINIVASAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Enough Sunlight and heat we have Start collecting sha...