POEM BY
PUNITH PUNI (PUNITHAN)
As if someone has folded today and taken it away
the threshold remained barren.
In the midst of summer
the young man came and stood
in readymade attires.
In his eyes
the leaping frog in ‘Matsuo Basho*
kept croaking as a time-worn sound.
The humour sought for a long time
suddenly knocked on the door
In its countenance
Summer’s wilting was there
And also the fragrance of Water Lily.
The calmness of White of the winter stork
and miniscule memories
burning like the twigs of rainy season.
The lone stem of pumpkin
The shade of Banyan leaf
with which a kiss dabbed
The curved scepter of Eggplant
Grandpa’s umbrella handle
With Embroidery _
All of them
have formed the humour frame.
In the end
casting aside all philosophies
Mother alone
stood at the kitchen doorway
and said casually –
The Dog took away Today.
*Matsuo Basho: Most famous Zen poet of Japan
இன்றைய கிழமையை நாய் தூக்கி போனது
இன்றைய நாளை
யாரோ சுருட்டி எடுத்து சென்றதுபோல்
வீட்டு வாசலில் வெறுமை கிடந்தது.
கோடையின் நடுவில்
ஆயுத்த ஆடையில் நின்ற இளைஞன் —
அவன் கண்களில்
மட்சு பாஷோ வின் குளத்தில் தாவும் தவளை
ஒரு பழைய ஒலி போல
திரும்பத் திரும்ப ஒலித்தது.
நெடுநாட்கள் தேடிய
நகைச்சுவை
திடீரென கதவு தட்டியது.
அதன் முகத்தில்
கோடையின் வாடலும் இருந்தது,
ஆம்பல் மலரின் வாசனையும் இருந்தது,
குளிர்கால கொக்கின் வெண்மை அமைதியும்,
மழைக்கால சுள்ளிகள் போல
பற்றி எரியும் சிறு நினைவுகளும்.
ஒரு பூசணிக்காயின் ஒற்றைக் கொம்பு,
முத்தத்தை ஒற்றி எடுத்த
ஆலிலை நிழல்,
கத்திரிக்காயின் வளைந்த செங்கோல்,
பூவேலைபாடு கொண்ட
தாத்தாவின் குடைக் கைப்பிடி —
அனைத்தும் சேர்ந்து
அந்த நகைச்சுவையின் உடம்பை கட்டின.
முடிவில்
எல்லா தத்துவங்களையும் ஒதுக்கி வைத்து
அம்மா மட்டும்
சமையலறை வாசலில் நின்று
எளிதாகச் சொன்னாள் —
இன்றைய கிழமையை
நாய் தூக்கி போனது
.,.. க. புனிதன்



No comments:
Post a Comment