INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 7, 2026

MOUNA ROOMI

 A POEM BY

MOUNA ROOMI

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)


Once again
the doors might open
That is not for
welcoming thee
But to fill up
their void.
In the tiny smile they throw at thee
Don’t you search for
Meanings myriad.
After lightning vanishes
the darkness would prove denser
Don’t you believe the images close by
and lose your peace thereby.
They would keep on moving
like the hot summer cloud
They wouldn’t pour as rain
to quench the thirst
Don’t you spread your love
In front of anybody
as a low-cost commodity.
Those returned
have not come to cure your wounds
They have come to cover
their scars
using thee – Beware.

மீண்டும் ஒருமுறை
கதவுகள் திறக்கப்படலாம்
அந்தத் திறப்பு
உங்களை வரவேற்பதற்கு அல்ல
அவர்களின் வெறுமையை
நிரப்பிக் கொள்வதற்கு
அவர்கள் வீசும்
சிறு புன்னகையிலும்
ஆயிரம் அர்த்தங்களை தேடாதீர்கள்
மின்னல் மறைந்த பிறகு
இருள் இன்னும்
அடர்த்தியாகவே இருக்கும்
அருகில் இருப்பது போலத் தோன்றும்
பிம்பங்களை நம்பி
உங்கள் அமைதியை இழக்காதீர்கள்
அவர்கள் ஒரு
கடும் கோடை மேகத்தைப் போல
நகர்ந்து கொண்டிருப்பவர்கள்
தாகத்திற்கு மழையாகப்
பெய்ய மாட்டார்கள்
உங்கள் அன்பை
விலை மலிவான ஒன்றாய்
யார் முன்னிலையிலும்
பரப்பி வைக்காதீர்கள்
திரும்பி வந்திருப்பவர்கள்
உங்கள் காயங்களை ஆற்ற வரவில்லை
அவர்களின் தழும்புகளை
உங்களைக் கொண்டு
மறைக்க வந்திருக்கிறார்கள்
- மவுனா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

KAVANUR SRINIVASAN

  A POEM BY KAVANUR SRINIVASAN Rendered in English by Latha Ramakrishnan(*First Draft) Enough Sunlight and heat we have Start collecting sha...