INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, March 7, 2026

ABDUL JAMEEL

 TWO POEMS BY

ABDUL JAMEEL

Rendered in English by Latha Ramakrishnan(*First Draft)

1.
HUNGER OF THE BOY’S HOUSEHOLD BOILING AS ‘NOMBU KANJI’

The boy who chasing the lambs
and wandering as one with the goats
Losing the way and straying
and has arrived late
keeps peeping into the cauldron
at the bottom of which
even after distribution
there remains rice lying frozen
The man-in-charge of the cauldron
does understand
the plea in the boy’s eyes
for Kanji
Though not adhering Nombu
He would have come for Kanji
to somehow manage the night....
Seeing him
waiting there with the hope
that he who distributed the Kanji
would at least offer him a mouthful
from his share
going away disappointed
All over my stomach
boils as Nombu Kanji
the hunger of the boy’s household.
*Nombu kanji is a nutritious South Indian savory porridge, traditionally made with rice, lentils, coconut milk, and meat or vegetables, consumed during Ramadan to break the fast at sunset. Known for being comforting, light, and filling, it is a staple Iftar dish in Kerala and Tamil Nadu.

நோன்புக் கஞ்சென கொதிக்கும்
சிறுவனின் வீட்டுப் பசி
_____________________________________
பகிர்ந்து முடிந்த பிறகும்
கஞ்சிக் கிடாரத்தின்
அடியில் உறைந்து கிடக்கும் சாதத்தை வாயூற வாயூற
எட்டியெட்டி பார்த்தபடி நிற்கிறான்
குடடி ஆடுகளை துரத்தி
ஆடுகளோடு ஆடாக அலைந்து
வழி தப்பித் திரிந்து
தாமதமாக வந்த சிறுவன்
கிடாரம் கழுகும்
அதிகாரிக்கு புரியாமலில்லை
சிறுவனின் கண்கள்
கஞ்சி கேட்கும் பாவனையை
நோன்பு நோற்காவிடினும்
இன்றைய இரவையாவது எப்படியும் சமாளிக்கலாமென
கஞ்செடுக்க வந்திருக்க கூடும்
பகிர்ந்தவர் தனக்கென எடுத்து வைத்ததிருக்கும் கஞ்சில்
ஆகக் குறைந்த பட்சம்
ஒரு மிடறாவது தரலாமென்ற நம்பிக்கையில் காத்திருந்தவன்
ஏமாந்து திரும்புவதை காண்கையில்
என் வயிறு முழுவதும்
நோன்புக் கஞ்சென கொதிக்கிறது
சிறுவனின் வீட்டுப் பசி
ஜமீல்

2.THE OFFICIAL - IN-CHARGE BRIMMING AS NOMBU KANJI
INSIDE THE BOY’S HEART

While returning
with eyes wandering all around
Stopping and staring and relishing
Even today the boy arrives
to get Kanji
only after the distribution is over
With his heels banging against his back
as he hurries along
agitated to the core
Wonder how many empty stomachs are waiting there
at the patio dry and bare
Sometimes his Umma might have sent him there
to get some Kanji
to manage supper
seeing the innocent boy
going away disappointed
carrying the empty vessel
looking back at the official
every now and then
his kind heart
boils like the Kanji cauldron
Calling him and embracing him
He gives him the Kanji
he had kept aside
for starting Nombu
and asks him to come in time the next day.
Now just as the container brimming
with Kanji overflowing
the official fills the boy’s heart
brimming and overflowing!

சிறுவனின் மனசு தோறும்
நோன்புக் கஞ்சென
நிரம்பி வழிந்த அதிகாரி
______________________________
வரும் வழியில் பராக்குகளில் மூழ்கித் திழைத்தலுத்த மட்டில்
இன்றும் பகிர்ந்து தீர்ந்த பிறகுதான்
கஞ்செடுக்க வருகிறான் சிறுவன்
அவன் குதிகால் முதுகில் முட்ட
பத்திப் பதறியோடி வரும் இன்னேரம்
நோன்பு நோற்கா விடினும்
ஒரு மிடறு கஞ்சிக்காக
எத்தனை பசித்த வயிறுகள்
வீட்டுத் திண்ணையில் காய்ந்து காத்துக் கிடக்கிறதோ
சில வேளை இன்றின்
இரவுணவை சமாளிக்கவென
அவனை கஞ்செடுத்து வர
உம்மா அனுப்பியிருக்க கூடும்
கள்ளங் கபடமற்ற சிறுவன்
ஏமாந்து வெற்று பாத்திரத்துடன்
அதிகாரியை திரும்பித் திரும்பி
பார்த்தவாறு செல்கையில்
கஞ்சிக் கிடாரமென கொதிக்கிறது
அவரது ஈரம் மீந்த மனம்
உடன் சிறுவனை அரவணைத்து
தான் நோன்பு திறக்கவென
எடுத்து வைத்திருந்த கஞ்சை
ஊற்றிக் கொடுத்து விட்டு
நாளை நேரத்துடன் வரச் சொல்கிறார்
இப்போது பாத்திரம் நிறைந்து
கஞ்சி வழிவதுபோல்
சிறுவனின் மனசு தோறும்
நிரம்பி வழிந்தார் அதிகாரி
ஜமீல்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JAN-FEB, 2026