In a cup of Tea there remains a Tea-Plantation
In a strand of feather lies the song of the bird
wind-written
Make a hole in a mustard seed and listen
The earth’s breath would come out through its skin.
There remains still in a chair
The warmth of the one who sat there just then
It is but his own person
Pursuing us who return home after burying the dead
the graveyard does come running for some distance
During the third leg of night of grandma’s final journey
A child is born in the house opposite
It is but that grandma no doubt.
Sneezing once we take in fresh air
A piece of sky enters inside
In the next sneeze it makes its exit
Even after a wagon gone past
It keeps running for a while
in our heart for a while.
In a small disk remains
the voice of the Neo- bard
whom you have been longing to see
all along.
In the kiss given by us
who claim acclaim proclaim
That our love exists in our tiny letter
her fragrance everywhere
That’s why we place the kiss
well inside the lips.
ஒரு கோப்பைத் தேநீரில் இருக்கிறது ஒரு தேயிலைக் காடு .
ஒரு சிறகில் இருக்கிறது பறவையின் மீது காற்று எழுதிய பாடல்
ஒரு கடுகைத் துளைத்துப் பாருங்கள்
பூமியின் மூச்சு வெளிவரும் தொலியின் வழியே
ஒரு நாற்காலியில் இன்னும் இருக்கிறது
சற்றுமுன் அமர்ந்து விட்டு போனவன் சூடு
அந்த சூடுதான் அவன்
செத்துப் போனவனை புதைத்து விட்டு வீடு வரும்
நம் பின்னால் ஓடி வரத்தான் செய்கிறது சுடுகாடு கொஞ்சம் தூரம்
பக்கத்து வீட்டுப் பாட்டி இறந்த மூன்றாம் ஜாமத்தில்
எதிர் வீட்டில் பிறக்கிறது ஒரு குட்டிப் பாப்பா
அந்தப் பாட்டிதான் அது
தும்மல் ஒன்று விட்டுப் புதுக்காற்றை வாங்குகிறோம்
ஒரு துண்டு வானம் உள்ளே செல்கிறது
அடுத்த தும்மலில் வந்து விடுகிறது வெளியே
ஒரு வாகனம் கடந்து போய்விட்டாலும்
சற்று நேரம் ஓடுகிறது நம் மனசுக்குள்
சின்ன குறுவட்டுவில் இருக்கிறார்
நீங்கள் பலநாளாய் தவமிருந்து பார்க்க நினைத்திருக்கும்
நவீன பாணன் குரல்
ஒரு துண்டுக் கடிதத்தில் நம் காதல் இருப்பதாக சிலாகிக்கும் நாம்
இடும் முத்தம் முழுதும் அப்பி இருக்கிறது அவள் வாசம்
அதனால் தானே முத்தத்தை மட்டும் உதட்டுக்கு
உள்ளே வைக்கிறோம்