INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, June 20, 2024

INSIGHT - MAY 2024


 

BOOMA ESWARAMOORTHY

 A POEM BY

BOOMA ESWARAMOORTHY

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



I have seen this man

coming in the evening everyday thus
when the early night has not yet started disrobing itself
and sitting in a black iron chair.
As one taken bath just then
he would be so fresh.
Without moving too close I sat next to him.
In front of us flower-plants galore
blooming without a care
unmindful of all there.
Of them there were many White Hibiscus flowers.
He too, a white Hibiscus
That we greeted each other exchanging ‘Good Evening’
Those White Hibiscus would have possibly noticed.
Beyond that we didn’t say anything to each other
Our mother tongues differ
Well, both of us and the flowers have
but one and the same poem to tell:
“In all places a New Street is there.
which is now an old street everywhere”.

முன்னிரவு தனது ஆடையை அவிழ்க்க துவங்கியிராத சாயங்காலத்தில் இவர் இப்படி தினமும் ஒரு கறுப்பு இரும்பு நாற்காலியில் வந்து அமர்ந்து கொள்வதை பார்த்திருக்கிறேன்.
இப்போதுதான் குளித்து முடித்தவரைப் போல புதிதாக இருப்பார்.
இவர் பக்கத்தில் ரொம்பவும் நெருங்காமல் அமர்ந்தேன்.
எங்களுக்கு எதிரே நிறைய பூச்செடிகள் யாரை பற்றியும் கவலைப் படாமல் பூத்திருந்தன.
அவைகளில் பல வெள்ளை செம்பருத்திகள்.
இவரும் கூட ஒரு வெள்ளை செம்பருத்திதான்.
நாங்கள் ஒருவருக்கொருவர் மாலை வணக்கம் சொல்லிக் கொண்டதை
வெள்ளை செம்பருத்திப் பூக்கள் கவனித்தும் இருக்கலாம்
அதற்கு மேல் நாங்கள் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. எங்களின் தாய் மொழி வேறுவேறு.
எங்கள் இருவரிடமும் பூக்களிடம் சொல்ல ஒரே ஒரு கவிதை இருக்கிறது.
“எல்லா ஊர்களிலும் ஒரு புதுத் தெரு இருக்கிறது. அது இப்போது ஒரு பழைய தெரு “

பூமா ஈஸ்வரமூர்த்தி

RAMESH PREDAN

 A POEM BY

RAMESH PREDAN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

TORTOISE AND MY 'SHE' FRIEND


He who went missing in the sea
narrated the tale of the tortoise
showing him the way.
Intervening I asked
‘Will you introduce the tortoise to me’
Only to him who is accustomed to living with the sea
the tortoise living in the tale
would be visible
While crossing the Layers of Time
of living beings
wading through the tales about them
in an unexpected spot
you would come face to face with that being.
That spot
can be either water or land or sky.
As long as there is belief in god
God would prevail.
In the tale-sea
In the leap of one wave
forsaking the tortoise
he caught hold of the god.
I blinked, confused.
That tortoise
Your friend – She - does know
It was upon its shell that she had
written your name with an iron nail.
Pierce through her dream and see.
If you can’t
wake up in the well of night
and listen to what she mutters fast asleep
Tortoise is God’s friend – a She
He gone missing in the
tale unending
stands on the shore
and stares at the sea.

ஆமையும் தோழியும்
கடலில் தொலைந்தவன் தனக்கு
ஆமை வழிகாட்டிய
கதையைச் சொன்னான்
இடைமறித்துக் கேட்டேன்
அந்த ஆமையை எனக்கு
அறிமுகம் செய்வாயா?
கடலுடன்
வாழப் பழகியவனுக்குத்தான்
அந்தக் கதையில் வாழும் ஆமை
கட்புலனாகும்
உயிர்ப் பொருளின் கால அடுக்குகளை
அதைப் பற்றிய கதைகளின் வழியே கடக்கும்போது
எதிர்பாராத ஓரிடத்தில்
அந்த உயிரியையே எதிர்கொள்வாய்
அந்த இடம்
நீராகவோ நிலமாகவோ விசும்பாகவோ இருக்கலாம்
கடவுளைப் பற்றிய நம்பிக்கை இருக்கும்வரை
கடவுள் இருக்கும்
கதைக் கடலில்
ஒரே அலையின் தாவலில்
ஆமையைக் கைவிட்டு
கடவுளை எட்டிப் பிடித்தான்
நான் குழம்பிப்போனேன்
அந்த ஆமையை
உன் தோழிக்குத் தெரியும்
அதன் ஓட்டின் மேல்
உனது பெயரை
ஆணியால் எழுதிவைத்தாள்
அவளது கனவை ஊடுருவிப் பார்
முடியாவிட்டால்
அவள் தூங்கிக்கொண்டே பேசுவதை
நடுயிரவில் கண் விழித்துக் கேள்
ஆமை கடவுள் தோழி
முடிவில்லா கதையில்
தொலைந்துபோனவன்
கரையில் நின்று
கடலை வெறிக்கிறான்.

ரமேஷ் பிரேதன்

G.P.ELANGOVAN

 TWO POEMS BY

G.P.ELANGOVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


(1)

We have grown into two different branches
of a tree.
In those times when we were counting the stars
with our fingers
Sky proved insufficient for us
In the radiant sea of
this full-moon day
many of the waves that dashed against
as reminiscences
of our times
Going away from each other
Retreating
For bearing testimony to Hope precise
One Tree
One Sea
don’t suffice, I surmise.

ஒரு மரத்தின் இருவேறு கிளைகளாக வளர்ந்துவிட்டோம் நாம்.
வானத்தின் நட்சத்திரங்களை விரல்பிரித்து எண்ணிக்கொண்டிருந்த காலத்தில்
வானம் நமக்கு போதவில்லை.
இன்றைய பெளர்ணமியின்
ஒளிமிகுந்த கடலில்
மோதிக்கொண்ட அலைகள் பலவும்
நம் காலத்தின்
நினைவுகளாக ஒன்றையொன்று
விலகியபடியே
திரும்பிக்கொண்டிருக்கிறது
நம்பிக்கையின்
ஒரு சாட்சியாக
proof
ஒரு மரம்
ஒரு கடல்
போதுமென தோன்றவில்லை.

G.P. இளங்கோவன்


(2)

The snake of my garden is as long as my height
It creeps crawling far away from my reach
When its massive frame filled with yellow and mossy green
leaving the dust of the land
twirl in the middle of the trunk road
some wagon does come to a halt
and then start
Memory of fear starting from snake
to tusker
keeps stretching thus.

என் தோட்டத்துபாம்பு என் உயரத்திற்கு நீளமானது
நான் அதை தீண்டாத தூரத்தில்தான் அது எப்போதும் ஊர்ந்துகொண்டிருக்கிறது
மஞ்சளும் கரும்பாசியுமான
அதன் பெருத்தவுடல் நிலத்தின் புழுதியிலிருந்து வெளியேறி
தார்சாலையின் நடுவே புரளும்போது
ஏதாவது ஒரு வாகனம்
நின்றுதான் புறப்படுகிறது
அச்சத்தின் நினைவு பாம்பிலிருந்து
தொடங்கி யானைவரை
இப்படியாகத்தான்
நீண்டுகொண்டிருக்கிறது.

MULUMATHY MURTHALA

 A POEM BY

MULUMATHY MURTHALA

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


DOLL’S SPECIALITY BEING….



It must have been quite long, I think
For twenty-five years or so
I have an expensive doll
Kept n the reception hall of
our household.
It knows to smile, speak,
and cry
Though the doll is quite aged
I have taught it to welcome the guests
Always sporting a smile
Playing the perfect host
Chitchat with them, congenially
Showering love upon them
And drinking Tea with them….
For I can’t at all
be the same always
like a doll,
my pals.
Mulumathy Murthala
பொம்மையின் ஸ்பெஷல் என்னவென்றால்..
நெடுங்காலம் என நினைக்கிறேன்
சுமார் இருபத்தைந்து வருடங்களாக
என் வீட்டின் முன்னறையில்
ஒரு அழகிய விலையுயர்ந்த
பொம்மை வைத்திருக்கிறேன்
சிரிக்கவும் பேசவும் அழவும்
அதற்குத் தெரியும்
கோபம் கொள்ளத்தெரியாத
அந்த பொம்மைக்கு
ஏழு கழுதை வயதானபோதிலும்
எப்போதும் ஒரு மலரின் புன்னகையுடன்
விருந்தாளிகளை வரவேற்று உபசரிக்கவும்
அவர்களோடு நட்புடன் உறவாடவும்
அன்பைப் பொழியவும்
தேநீர் அருந்தவும் அதற்கு நான்
கற்றுக் கொடுத்திருக்கிறேன்
ஏனென்றால்
ஒரு பொம்மையைப் போல
எப்போதும் என்னால் ஒரே மாதிரி
இருக்க முடிவதில்லை
அன்பர்களே..
@முழுமதி எம்.முர்தளா

AASU SUBRAMANIAN

 A POEM BY

AASU SUBRAMANIAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


There in Rain
Man
and Woman
That which enables the seed
buried in the earth
to sprout
is Rain Female
That which enables it to grow and flourish
is Rain Male.
Being seamlessly entwined
in communion
mating grating fretting fuming
reveling rejoicing
it is the stormy lashing wind
that causes trepidation.
And as the pain of clouds pregnant
Mother Earth’s abdomen.
Indeed Man Woman are there
in Rain.
Seeing the forest withering…..
It is the humaneness
which pours down as shower
that is the nectar of Rain Supreme..
True there in Rain
Male, Female
But not dissimilar -
One Whole.

மழையில்
ஆண்
பெண் உண்டு
பூமியில் புதையுண்ட
விதையை முளைக்கவிடுவது
பெண் மழை
துளிர்த்து கிளைக்கவிடுவது
ஆண் மழை
கூடல் ஊடலில்
இழைந்து துய்த்தலில்
சூறைக்காற்று தான் சலனப்படுத்துகிறது
சூல் கொண்ட மேகத்தின் வலியாக
பூமியின் வயிறும்.
ஆண் பெண் மழையிலும் உண்டு தான்.
காய்ந்து சருகாகும் காட்டைப் பார்க்கையில்....
மழைக்கும் மனிதம்தான்
மாமழையின் அமிர்தம்
மழையில் ஆண் பெண் உண்டு
ஆனால் வேறு வேறெல்ல.

ஆசு சுப்பிரமணியன்

KADANGANERIYAN ARIHARASUTHAN

 A POEM BY

KADANGANERIYAN ARIHARASUTHAN

Translated into English by Latha Ramakrish nan(*First Draft)





To carry out their duties
left unfinished
The clouds have arrived.
Having the clouds as blanket
Providing solace in the biting cold
the Sun is sleeping.
Being neither here nor there
while in the middle
indolence is sown
in Neurons.
With he who has sowed with hope
retrieving that which was lost
The boy hope-filled goes on a Padhayathra.
The rain that pours down
for hiding the tears of father
at the moment of coming face to face
Ho – what to call it – I am at a loss
When He with the wholesome realization of
any and everything
writes himself again and again
and erasing it anon
there takes shape a sculpture
as never before.

விட்டுச் சென்ற கடமைகளை
முடிக்க வந்திருக்கின்றன
மேகங்கள்
குளிருக்கு இதமாக மேகங்களை போர்வைகளாக்கி
தூங்கிக் கொண்டிருக்கிறான் கதிரவன்
அங்குமில்லாது
இங்குமில்லாது
இடைப்பட்டு நிற்கும்போது
நியூரான்களில் சோம்பலை விதைக்கிறது
விதைத்தவன் நம்பி இழந்தவற்றை மீட்க
பாலகன் நம்பிக்கையோடு
பாதயாத்திரை போகிறான்
இடைப்பட்டு சந்திக்கும் தருணத்தில்
தந்தையின் கண்களில் சுரக்கும் கண்ணீரை
மறைக்க பொழிகின்ற மழையை
என்னவெனச் சொல்லி அழைக்க
யாவற்றையும் உணர்ந்தவன்
திரும்பத் திரும்ப தன்னையெழுதி எழுதி
அழிக்கும் போது
புதியதாக உருப் பெருகிறதொரு சிற்பம்.

கடங்கநேரியான்

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024