A POEM BY
M.M.BYSEL
and open
The door sways
screeching
Applying oil
it shuts smoothly.
The wind takes back
the sound in it.
On a rainy day
the door shuts not.
You push it hard and close it fast.
It refuses to fit inside the frame.
The carpenter arrives.
The door would again shut
The wind again
takes back the loud thud.
The nonchalant pride of a local tree
is with the tree.
When being a tree
the wind remained a part of it
While being a door
It partakes
in some of its distresses.
கதவை
அடைத்துவிட்டு
திறக்கிறாய்
கதவு அசைகிறது
கிறீச் என்ற
ஒலியுடன்
எண்ணைப்
போட்டதும்
எளிதாக அடைகிறது
அதிலிருந்த ஒலியை
காற்று திரும்பவும்
எடுத்துக் கொள்கிறது
ஒரு
மழைநாளில்
கதவு அடைய மறுக்கிறது
ஓங்கி அடைக்கிறாய்
சட்டத்தில் பொருந்த
மறுக்கிறது
தச்சர் வருகிறார்
கதவு மீண்டும்
அடையும்
அந்த பெரிய
ஓசையை
திரும்பவும் காற்று
எடுத்துக் கொள்கிறது
ஒரு நாட்டு
மரத்தின் திமிர்
மரத்திடம் இருக்கிறது
ஒரு மரமாக
இருந்தபோது
காற்று உடனிருந்தது
கதவாக இருக்கும்
போது
சில துயரங்களில்
பங்கெடுக்கிறது.
Bysal
No comments:
Post a Comment