INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, June 19, 2024

RAGAVAPRIYAN THEJESWI

 TWO POEMS BY

RAGAVAPRIYAN THEJESWI

Translated into English by Latha Ramakrishnan





As aircraft
that knows not swimming
Straightaway crashes into the mid-sea
A Word.
Landing on the seabed
sits there cross-legged
There
baby fishes
kissing the Word
would start their prattle.
All over the dais of the sea-surface
rhe noise uproarious of
thronging cluster of words
come floating as
fish-waves
The din and noise of words on stage
would be snatched by the beaks of Arctic Tern
Caught in one of the nets
thrown widespread
the Word-Aircraft
faltering to surface
A born anew quiet-word
diffident of the dais
would leap in the sky
with zest and fervour.
The wordy-noises of the aircraft
that has gone missing in the mid-sea
waging assault against the shore
as waves with no respite whatsoever
The depth of Word
or the depth of Sea
_ Which is more
Won’t you declare -
Wave Dear…..

நீச்சல் அறியா
விமானமாய்
நடுக்கடலுக்குள்
பாய்கிறது ஒருசொல்..
கடல் ஆழத்தினடியில்
மெளனமாய் சம்மனமிடுகிறது..
ஆங்கே
சொல்லை முத்தமிடும்
மழலை மீன்கள்
பேசத் தொடங்கும்..
சொற்கூட்டம் ஆர்பரிக்கும்
கடல் மேற்பரப்பு மேடையெங்கும்
மீன் அலைகளாய்..மிதந்துவர..
மொழியின் மேடைச் சத்தம்
ஆலாக்களின் அலகுகளில்
சிக்கிவிடும்..
வீசப்பட்ட வலையொன்றில்
சிக்குண்ட சொல்விமானம்
வெளிவரத் தயங்க..
மேடைக் கூச்சமுடை
புத்தம் புதிய மெளனச்சொல் ஒன்று
வானில் சீறிப் பறக்கும்..
நடுக் கடலுக்குள்
தொலைந்து விட்ட
விமானச் சொற்சத்தங்கள்
ஓய்வற்ற அலைகளென
கரை தாக்க..
சொல் ஆழம் கடல் ஆழம்
எது அதிகம் சொல் அலையே...
ராகவபிரியன்

(2)

There, in my house alone
a patio,
which has become a thing bygone…
Upon that a sparrow
after drifting in the sun
has alighted and sat down.
Two legs it has.
Two wings to fold and keep safe
A beak…
A sky meant for it….
The height to scale….
Worms caught in its beak…
All enduring…
It is to convey to me
that the sky meant for me
The height
And the insects flying around me
This patio
and itself
are but evanescent _
that it has,
after wandering in the sun,
alighted here and sat down.

அரிதாகிப்போன திண்ணை
என் வீட்டில் மட்டும் ..
அதில் குருவியொன்று
வெயிலில் அலைந்துவிட்டு
வந்தமர்ந்திருக்கிறது..
அதற்கு இரண்டு கால்கள் உள்ளன..
மடித்து வைத்துக்கொள்ள
இரண்டு றெக்கைகள் ..
ஒரு அலகு...
அதற்கான வானம்
பறப்பதற்கான உயரம்
அலகில் சிக்கும் பூச்சிகள்..
அனைத்தும் நிரந்தரம்..
எனக்கான வானமும்
உயரமும்
என்னைச் சுற்றிப்பறக்கும் பூச்சிகளும்
இந்தத் திண்ணையும்
தானும்
நிரந்தரமில்லையென
சொல்லத்தான்
வெயிலில் அலைந்துவிட்டு
வந்தமர்ந்திருக்கிறது..
ராகவபிரியன்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024