A POEM BY
MULUMATHY MURTHALA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
For twenty-five years or so
I have an expensive doll
Kept n the reception hall of
our household.
It knows to smile, speak,
and cry
Though the doll is quite aged
I have taught it to welcome the guests
Always sporting a smile
Playing the perfect host
Chitchat with them, congenially
Showering love upon them
And drinking Tea with them….
For I can’t at all
be the same always
like a doll,
my pals.
Mulumathy Murthala
•
பொம்மையின் ஸ்பெஷல் என்னவென்றால்..
நெடுங்காலம் என நினைக்கிறேன்
சுமார் இருபத்தைந்து வருடங்களாக
என் வீட்டின் முன்னறையில்
ஒரு அழகிய விலையுயர்ந்த
பொம்மை வைத்திருக்கிறேன்
சிரிக்கவும் பேசவும் அழவும்
அதற்குத் தெரியும்
கோபம் கொள்ளத்தெரியாத
அந்த பொம்மைக்கு
ஏழு கழுதை வயதானபோதிலும்
எப்போதும் ஒரு மலரின் புன்னகையுடன்
விருந்தாளிகளை வரவேற்று உபசரிக்கவும்
அவர்களோடு நட்புடன் உறவாடவும்
அன்பைப் பொழியவும்
தேநீர் அருந்தவும் அதற்கு நான்
கற்றுக் கொடுத்திருக்கிறேன்
ஏனென்றால்
ஒரு பொம்மையைப் போல
எப்போதும் என்னால் ஒரே மாதிரி
இருக்க முடிவதில்லை
அன்பர்களே..
@முழுமதி எம்.முர்தளா
No comments:
Post a Comment