A POEM BY
RAMESH PREDAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
Intervening I asked
‘Will you introduce the tortoise to me’
Only to him who is accustomed to living with the sea
the tortoise living in the tale
would be visible
While crossing the Layers of Time
of living beings
wading through the tales about them
in an unexpected spot
you would come face to face with that being.
That spot
can be either water or land or sky.
As long as there is belief in god
God would prevail.
In the tale-sea
In the leap of one wave
forsaking the tortoise
he caught hold of the god.
I blinked, confused.
That tortoise
Your friend – She - does know
It was upon its shell that she had
written your name with an iron nail.
Pierce through her dream and see.
If you can’t
wake up in the well of night
and listen to what she mutters fast asleep
Tortoise is God’s friend – a She
He gone missing in the
tale unending
stands on the shore
and stares at the sea.
•
○ ஆமையும் தோழியும்
கடலில் தொலைந்தவன் தனக்கு
ஆமை வழிகாட்டிய
கதையைச் சொன்னான்
இடைமறித்துக் கேட்டேன்
அந்த ஆமையை எனக்கு
அறிமுகம் செய்வாயா?
கடலுடன்
வாழப் பழகியவனுக்குத்தான்
அந்தக் கதையில் வாழும் ஆமை
கட்புலனாகும்
உயிர்ப் பொருளின் கால அடுக்குகளை
அதைப் பற்றிய கதைகளின் வழியே கடக்கும்போது
எதிர்பாராத ஓரிடத்தில்
அந்த உயிரியையே எதிர்கொள்வாய்
அந்த இடம்
நீராகவோ நிலமாகவோ விசும்பாகவோ இருக்கலாம்
கடவுளைப் பற்றிய நம்பிக்கை இருக்கும்வரை
கடவுள் இருக்கும்
கதைக் கடலில்
ஒரே அலையின் தாவலில்
ஆமையைக் கைவிட்டு
கடவுளை எட்டிப் பிடித்தான்
நான் குழம்பிப்போனேன்
அந்த ஆமையை
உன் தோழிக்குத் தெரியும்
அதன் ஓட்டின் மேல்
உனது பெயரை
ஆணியால் எழுதிவைத்தாள்
அவளது கனவை ஊடுருவிப் பார்
முடியாவிட்டால்
அவள் தூங்கிக்கொண்டே பேசுவதை
நடுயிரவில் கண் விழித்துக் கேள்
ஆமை கடவுள் தோழி
முடிவில்லா கதையில்
தொலைந்துபோனவன்
கரையில் நின்று
கடலை வெறிக்கிறான்.
ரமேஷ் பிரேதன்
●
No comments:
Post a Comment