INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Thursday, June 20, 2024

KADANGANERIYAN ARIHARASUTHAN

 A POEM BY

KADANGANERIYAN ARIHARASUTHAN

Translated into English by Latha Ramakrish nan(*First Draft)





To carry out their duties
left unfinished
The clouds have arrived.
Having the clouds as blanket
Providing solace in the biting cold
the Sun is sleeping.
Being neither here nor there
while in the middle
indolence is sown
in Neurons.
With he who has sowed with hope
retrieving that which was lost
The boy hope-filled goes on a Padhayathra.
The rain that pours down
for hiding the tears of father
at the moment of coming face to face
Ho – what to call it – I am at a loss
When He with the wholesome realization of
any and everything
writes himself again and again
and erasing it anon
there takes shape a sculpture
as never before.

விட்டுச் சென்ற கடமைகளை
முடிக்க வந்திருக்கின்றன
மேகங்கள்
குளிருக்கு இதமாக மேகங்களை போர்வைகளாக்கி
தூங்கிக் கொண்டிருக்கிறான் கதிரவன்
அங்குமில்லாது
இங்குமில்லாது
இடைப்பட்டு நிற்கும்போது
நியூரான்களில் சோம்பலை விதைக்கிறது
விதைத்தவன் நம்பி இழந்தவற்றை மீட்க
பாலகன் நம்பிக்கையோடு
பாதயாத்திரை போகிறான்
இடைப்பட்டு சந்திக்கும் தருணத்தில்
தந்தையின் கண்களில் சுரக்கும் கண்ணீரை
மறைக்க பொழிகின்ற மழையை
என்னவெனச் சொல்லி அழைக்க
யாவற்றையும் உணர்ந்தவன்
திரும்பத் திரும்ப தன்னையெழுதி எழுதி
அழிக்கும் போது
புதியதாக உருப் பெருகிறதொரு சிற்பம்.

கடங்கநேரியான்

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024