A POEM BY
RAJA SUNDARARAJAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(*With suggestions and corrections given by the poet duly incorporated)
Bare to the core is the basic requisite.
During the crescendos of communion
ornaments prove redundant.
Eyes perceive the geometrical shapes of the body,
its curves , ebbs and flows;
the moans and groans,
sweet nothings uttered hissing and panting,
abusive epithets, all in every way
are but accessories – so to say.
Narrating a poem is not
just a statement that merely states
what is what
Every line is the quiver of the strains
in a string instrument.
Fingers that know not the art of tuning
would do better remaining immobile
or counting the currency notes all the while.
இலக்கணம்
அம்மணம் மட்டுமே அடிப்படைத் தேவை
கலவியின் உக்கிரப் பொழுதுகளின் போது
அணிகலன்கள் என்ன பொருள்தரக் கூடும்?
கண்களில், வடிவக் கணித உடம்பின்
வளைவுகளும் பொங்கித்தாழும் அலைவுகளும்;
காதுகளில், முனகல் ஆவிமூச்சுக்
கொஞ்சல் வார்த்தைகளும் கெட்ட வசவுகளும்
அணி அலங்காரமன்றி வேறென்ன அங்கே?
உள்ளதை உள்ளபடி கூறும்
ஒரு கூற்றாவதில்லை கவிதைகூறல்.
ஓரோர் அடியும்
ஒரு நரம்பிசைக்கருவித் தந்தியின் அதிர்தல்.
சுருதி கூட்டத் தெரியாத விரல்கள்
சும்மா இருத்தல்
அல்லது பணத்தாள் எண்ணுதல் நலம்.
......................................................................................................................................
* BEST SELECTION OF WORDS IN THE BEST ORDER என்று கவிதை குறித்துச் சொல்லப்படுவதுண்டு. கவிஞர் ராஜசுந்தரராஜனின் மூன்று கவிதைகளை எனக்குப் புரிந்த வரையில் மொழி பெயர்த்து அவரிடம் அனுப்பி திருத்தங்கள் உண்டா என்று கேட்டபோது (அவர் என் நட்பு வட்டத்தில் இல்லையென்பதால் நானே தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்துப் பதிவேற்றுவது முறையாகாது என்று அவரிடம் என் ஆங்கில மொழிபெயர்ப்பை அனுப்பி அனுமதி கேட்டேன்) ஒவ்வொரு வார்த்தையின் உட் குறிப்பு குறித்தும், மொத்த கவிதையின் தத்துவார்த்த தொனி உள்ளடக்கம் குறித்தும் அவர் விவரித்து எழுதியி ருக்கும் விதம் பிரமிப்பூட்டியது.
Writerly Text, Readerly Text எப்படியெல்லாம் மாறுபடுகின்றன, எந்தெந்தவிதத்தி லெல்லாம் மாறுபடக்கூடும் என்பதையெல்லாம் அறிய முடிந்தது.
உதாரணமாக, அவருடைய தவளைக்குளம் கவிதை. அதில் ஒலிப்பது ஒற்றைக்குரலா? ஒன்றுக்கு மேற்பட்ட குரல்களா?
அதையெல்லாம் குறித்து தனிக் கட்டுரையே எழுதலாம்; எழுதவேண்டும்!
நான் மொழிபெயர்த்த மூன்று கவிதைகளில் ஓரளவு பரவாயில்லை என்று முழுமனதுக்குச் சற்றுக் குறை வான மனதுடன் கவிஞர் ஏற்றுக்கொண்ட ஒரு கவிதை மொழிபெயர்ப்பை மட்டும் இங்கு பதிவேற்றியுள்ளேன்!
– லதா ராமகிருஷ்ணன்.
No comments:
Post a Comment