FOUR POEMS BY
KAYAL.S
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
The countenance
She who would be speeding past
paying just a casual obeisance _
O, why hasn’t she come as yet
Wondering Ariya Naachi keeps rising and peeping from the sanctum sanctorum.
In her haste to catch the bus would she go past without a glance….?
Growing apprehensive
She comes to the threshold with her sari impeding
In a flash the two had an eyeful of each other
and then
moved on
toward their respective workplace.
Kayal S
•
கல் வாசனை
பெரும் விகசிப்புடன் செம்பருத்திப் பூவென இதழ் விரித்திருக்கிறது அருள்பாலிக்கும் முகம்.
போகிற போக்கில் தினங்
கண்ணொற்றிப் போகிறவளை
எங்கே இன்னும் காணவில்லை?
கர்ப்பக் கிரகத்திலிருந்து எழுந்தெழுந்து எட்டிப் பார்க்கிறாள் அரிய நாச்சி.
பேருந்திற்கான அவசரத்தில் பாராமல் போய்விடுவாளோ எனும் பதற்றத்தில் புடவை தடுக்க
வாசலுக்கு வருகிறாள்.
கண்ணிமைக்கும் நொடியில் ஆசையாசையாய்ப் பார்த்துக் கொண்ட இருவரும்
பிறகு
தத்தம் அலுவலகம் போயினர்.
(2)
A mentally deranged person said that he knows not the meaning
who had come in his dream.
How can that uttered by God be bad words
Asked the Wind.
If it was indeed God who came tell me his shade.
Asked Water.
Whether the shade fell on me – the Land wondered
Did the tongue move upward enquired Fire.
No note in the register the Sky grumbled
Anyway,
what would you believe as spoken
by God of the man insane _
so to say.
Kayal S
•
மனம் பிறழ்ந்தவனொருவன் கனவில் வந்த கடவுளிடம் சண்டையிட்டபோது தன் காதில் விழுந்த வசைச் சொற்களுக்குப் பொருள் புரியவில்லை என்றான்.
கடவுள் பேசியதெப்படி கெட்ட வார்த்தைகளாகும் என்றது காற்று.
வந்தது கடவுளெனில் நிறத்தைக் கேட்டது நீர்.
நிழல் தன் மேல் விழுந்த ஐயம் நிலத்துக்கு.
நாவின் அசைவு மேல் நோக்கியிருந்ததா வினவியது நெருப்பு.
பதிவேட்டில் குறிப்பில்லை குறைபட்டுக் கொண்டது வானம்.
இரவில் வந்த கனவில்
மனம் பிறழ்ந்தவனின் கடவுள் பேசியது என்று எதைச் சொன்னால் நம்புவீர்கள்?
(3)
enthralled by the emerald-dove
toddling at a little distance
swaying its trunk fervently
so turning into a bird
a pelican moved and gave way
All at once the land began changing into Sky
வயலில் நின்ற சிற்றானைக் குட்டி
சற்று தொலைவில் தத்திக் கொண்டிருந்த
மரகதப் புறாவின் அதிசயத்தில் தும்பிக்கையை வேகமாய் அசைத்தசைத்துப் பறவையாவதை
இமைக்காது பார்த்த கூழைக்கடா ஒன்று விலகி வழிவிட்டது.
நொடியில் வானாக மாறத் துவங்கிற்று நிலம்.
...................................................................................................................................
//மூல கவிதை போலவே அதன் மொழிபெயர்ப்பிலும் வார்த்தைத் தேர்வில் மிகுந்த கவனம் தேவையாக இருக்கிறது. இந்தக் கவிதையில் ’சிற்றானைக் குட்டி’ என்று வருவது யானைக்குட்டி என்பது அழுத்தமாக இருமுறை கூறப்பட்டிருப்பதாக ஒரு வாசிப்பில் தோன்றினாலும் அப்படியிருக்காது என்ற உள்ளுணர்வோடு கூகுளில் பார்க்க சிற்றானை என்றொரு வகையிருப்பது தெரிந்தது. Pygmy elephant. ஆகாயத்திற்கு எப்போதுமே sky என்றே போடுகிறோமே - கொஞ்சம் பந்தாவாக வேறு அரிய ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்தலாமே என்று தேடினால் • azure. • empyrean. • firmament. • heavens. • lid. • vault. • welkin. • celestial sphere. என்று நிறைய வார்த்தைகள் இருந்தன. ஆனால், அவை வேறு சில அர்த்தங்களையும் தந்து குழப்பிவிடக்க்கூடியவை. ஆகாயம் ஆகாயம்தான். அதேபோல் Sky skyதான் என்ற முடிவுக்கே வரவேண்டியிருந்தது.
கூழைக்கடாவும் ஆங்கில Pelican வகைகளில் ஒன்று. ஆனால் ஆங்கில மொழிபெயர்ப்பில் பெலிக்கன் என்றே குறிப்பிட்டிருக்கிறேன். அது சரி - இந்தக் கவிதையில் நிலம் வானமாக மாறத் தொடங்கியது என்று கவிஞர் சொல்வது புற வர்ணஜாலங்களையா - அக வர்ணஜாலங்களையா - இரண்டிற்கும் தொடர்புண்டல்லவா! சிற்றானை, கூழைக்கடா, மரகதப்புறா - இவற்றையெல்லாம் தனித்து அடையாளங்காணும் அளவு நகரவாசியான எனக்குப் பரிச்சயம் கிடையாது. எனவே இவற்றைக் கவிதையில் கொண்டுவருவதில் உள்ள நுட்பங்கள் எனது புரிதலுக்கு அப்பாலானவையாகவே தோன்றுகிறது. எல்லாமே தோற்றம்தான் - காட்சிப்பிழைதான். இந்தக் கவிதையை நான் மொழிபெயர்க்கக் காரணம் இதிலுள்ள சில காட்சிப்படிமங்கள் - அவற்றினூடாய் உணரக்கிடைக்கும் சில அவ்வளவாகத் தெளிவாகாத உட்குறிப்புகள்..... இன்னும் நிறைய சொல்லலாம். இப்படி எல்லாக் கவிதை களுக்கும் எழுத ஆர்வமாக இருந்தாலும் அது எல்லா நேரமும் சாத்தியப்படுவதில்லை - லதா ராமகிருஷ்ணன்//
(4)
The smile of the female body enduring copulation after child birth
Casting aside your abject indifference waiting with all my love in tact for the next day
Storing the secrets vomited on the liquor-table and trumpeting them after the companionship turning sour
The malice of turning into the razor-edge of knife dipped in venom
and hacking love
the heat of a misgiving
Despite knowing that your excuses are the ploys of pilfering from the visually challenged man
Pardoning it all my mercy pristine
Tearing apart the pregnancy from illicit relationship and nurturing the body for a better relationship.
Kayal S
•
உதிர் சாத்தியங்களுடன் நெகிழ் மண்ணைப் பற்றியிருக்கிற பள்ளத்தாக்கின் மரமானவுன் அன்பை
கால எந்திரத்தின் தாளடைத்து என் உயிரைக் கடவுச் சொல்லாக்குகிறேன்.
மகவீன்ற பின்னான கலவி நொடி சகிக்கிற பெண்ணுடற் புன்னகை
உன் புறக்கணிப்பைப் புறந்தள்ளி அடுத்த நாளுக் கான பிரியமேந்திக் காத்திருத்தல்.
குடி மேசையில் ஒக்கரித்த ரகசியங்களைச் சேமித்து முறிந்த நட்புக்குப் பின் முரசடித்தல்
பிணக்கில் தவறிச் சிந்திய ஒற்றைச் சொல்லைக் கத்தியின் கூர் முனை விடமாய்த் தடவிக் காதலைத் துவம்சம் செய்கிற கீழ்மை.
பார்வையற்றவனிடம் திருடித் தின்கிற சாகசங்க ளுன் சமாதானமென அறிந்தும் மன்னிக்கிற என் கருணை
தகாத உறவிற் சுமந்த கர்ப்பம் அறுத்து வீசி அடுத்த உறவுக்கு உடல் பேணல்.
...............................................................................................................
//Best selection of words in the best order என்று கவிதை வரையறுக்கப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஒரு கவிதை கவனம் பெறுவதற்கு மொழிநயம் மிக முக்கியக் காரணங்களுள் ஒன்று. வேறு காரணங்களாக மூன்றை முன்னிலைப்படுத்தலாம். இதுவரை சொல்லாத விஷயத்தை/ பார்வையை முன்வைத்தல்; ஏற்கனவே பேசப்பட்ட விஷயத்தைப் புதிய கோணத்தில் எடுத்துக்காட்டுதல், பலப்பல முறை பேசப்பட்டுவிட்ட விஷயத்தை மிகப் புதிய வார்த்தைகளால், அளவீடுக ளால், ஒப்பீடுகளால் பேசி புதிய கனபரிமாணம் கொண்ட தாக்குதல். கவிஞர் கயல் அவர்களுடைய இந்த அடர் செறிவான சிறிய கவிதை அத்தகையது. கொஞ்சம் விட்டால் melodramatic ஆகக் கூடிய அபாயமும் much used words and phrasesயைக் கையாளும் அபாயமும் நிறைந் தது. ஆனால் அப்படியாகாமலிருக் கிறது கவிதை. அதனா லேயே அதன் தாக்கம் அதிகமாகிறது. கவிதையின் இறுதி வரி பிரச்சாரமாகாத, தருவிக்கப்படாத, வெகு இயல்பாய் எழும் அழுத்தமான பெண்விடுதலை முழக் கம்! மொழி பெயர்ப்பில் நான் சில adjectivesஐப் பயன் படுத்தியிருக்கிறேன் - மூல கவிதை வரிகளின் தாக்கத்தை ஏற்படுத்த. ஆனாலும் மூல கவிதையின் அடர்வை எட்டவே முடியவில்லை.
- லதா ராமகிருஷ்ணன்//
No comments:
Post a Comment