TWO POEMS BY
PAALAI NILAVAN
or partly -
He has the countenance
so perplexed.
Yet he looked like a saint
At his feet a dog
was tearing a polythene cover.
The saint was sitting
as if dwelling between Expectation and its
Negation
In front of him there were two lemons
One was entirely Yellow
Another absolute Green
As I sat facing the saint
Offering me the absolute green
He asked me to close my eyes.
As I did so
with memories going astray
mind deranging
panting
I was running somewhere
Instantly something flashing within
When I opened my eyes,
Staring at the lemon entirely yellow
and tearing the polythene cover
I am lying as the street dog
And the saint
lies there dead.
Paalainilavan Nilavan
•
இரண்டு கனிகள்
முற்றும் துறந்தாரா
பாதி துறந்தாரா
என்ற சந்தேகத்தின்
முகச் சாயல் அவருக்கு
ஆனால் துறவி போல இருந்தார்
காலடியில்
ஒரு நாய்
பழைய பாலித்தீன் உறையை
அது கிழித்துக் கொண்டிருக்கிறது
துறவி
எதிர்பார்ப்பிற்கும்
எதிர்பார்ப்பின்மைக்கும்
நடுவே வசிப்பவர் போல
அமர்ந்திருந்தார்
அவர் முன்னே
இரண்டு எலுமிச்சைகள்
ஒன்று பூரண மஞ்சள்
மற்றது சம்பூர்ண பச்சை
துறவி முன் அமர்ந்ததும்
கையில்
சம்பூர்ண பச்சையைக் கொடுத்து
கண்களை மூடச் சொன்னார்
மூடியதும்
ஞாபகங்கள் வழிதப்ப
சித்தம் பிசக
மூச்சிரைக்க
எங்கோ ஓடிக் கொண்டிருக்கிறேன்
திடீரென பொறி தட்ட
கண் விழிக்கவும்
பூரண மஞ்சள் கனியை
பார்த்துக் கொண்டே
பாலித்தீன் பையை கிழித்தபடி
தெரு நாயாக படுத்திருக்கிறேன்
துறவியோ
இறந்து கிடக்கிறார்.
I climb the staircase.
Ahead of me
a frog
along with the chillness
lilting and leaping
climb the steps
in biting cold
toward my abode.
Alas, so big a rain is required
for a new guest to arrive at my door –
Before I could say it
a deafening thunder
As it burst out of the sky
from the Age of Nova
and landed somewhere faraway
the frog and myself blinked
terror-struck.
The next moment
closing the door
we hid ourselves in a cabin
Very much smaller than Nova’s casket.
Paalainilavan Nilavan
புதிய விருந்தினர்.
கொட்டும் மழையில்
நனைந்து
மாடிப்படியேறுகின்றேன்
எனக்கு முன்பே
ஒரு
தவளை
மழைக் குளிருடன்
குதித்து
குதித்து
என் வீட்டை நோக்கி
அத்தனை குளிருடன்
படியேறுகின்றது
ஒரு
புத்தம் புதிய விருந்தினர்
வருவதற்கு
இப்படி ஒரு
மஹா மழை வர வேண்டியிருக்கின்றதே
என்பதற்குள்
ஒரு
பேரிடி
அது
நோவா காலத்திலிருந்து
வானிலிருந்து
எங்கோ விழவும்
ஒரு
கணம்
நானும்
தவளையும்
பீதியுற
கண்களை மூடித் திறந்தோம்
மறுகணம்
கதவைச் சாத்தி
நோவாவின்
பேழையை விட
மிகவும்
சிறியதொரு அறையில்
ஒளிந்து கொண்டோம்.
No comments:
Post a Comment