A POEM BY
VASANTHADHEEPAN
THE BURNING TRUTH
Must be twelve year old
Straightaway sinking his hands into the toilet-bowl
He began cleaning it.
‘Why this boy is languishing so
Not going to school - Ho, no…’
‘Sir, work is done
Pay me soon
I should go and buy
liquor for my father
Sounding caustic, sarcastic
the man of the house
threw abusive words
heartlessly on him
who couldn’t protest
Quietly the boy uttered those words
as stinging slap on the man’s face
“My dad drinks not out of conceit,
but for desilting the gutter, you see.
Vasanthadheepan
•
எரிந்து கொண்டிருக்கிறது
அவசரமாய் வந்தான்
அவனுக்கு பனிரெண்டிருக்கும்
கக்கூஸ் கோப்பைக்குள்
கைகள் நுழைத்துக் கழுவ ஆரம்பித்தான்.
பள்ளிக்குச் செல்லாமல்
ஏனிவன்
பாழ்பட்டுப் போனான் ...?
" ஸார்.. கழுவிட்டேன்
கூலி கொடுக்க...
சீக்கிரம் அப்பனுக்கு
சாராயம் வாங்க போகணும்..."
எள்ளலாய் அவரோ
இதயமற்ற வசைகளை
எதிர்க்க இயலா அவன் மீது
இரக்கமின்றி வீசினார்.
நிதானமாய் அவன்
நெற்றியடியாய் சொன்னான் _
" எங்க அப்பன்
குடிக்கிறது
திமிருக்கில்ல....
சாக்கடை தூர் வார்றதுக்கு. "
வசந்ததீபன்
No comments:
Post a Comment