INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Saturday, April 1, 2023

AYLI

 A POEM BY 

AYLI



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

//கவிதை பிடித்திருந்தது. மொழிபெயர்க்கத் தொடங்கினேன். பிறகுதான் பார்த்தேன் - இவரும் கவிஞர் ஷகியின் மகள்! மனதுக்கு நிறைவாக இருந்தது - லதா ராமகிருஷ்ணன்//

Mehshia began writing
diary since the time she was fourteen.
Even in the days prior to that began writing
diary since the time she was fourteen.
Even in the days prior to that
She might have written.
With her colours on the wall and with stickers on the almirah mirrors.
Mehshia writes not her diary with words alone.
With day dreams also conceiving imaginary forms she would turn into a creator of sort
One day intend on drawing her cat in the diary
She was holding ‘Cuzy’ and insisting on sticking her in the sheet.
Between fourteen and sixteen years of age
She wanting to bloom into a politician
Kept changing her speeches and characteristics
Every now and then.
Hence her voice might have turned hoarse.
It could be the reason for Mehshia being eager to read News and listen to it
Mehshia had an intense love for planting tomato sapling
She would give a pet name to each and every tomato plant.
She would kiss them, feed them
And also cover them with small clothes.
Mehshi would always keep those tomato plants in curd-filled earthen bowls
Under her cot and go to sleep
Her dawn would break in quarrels.
Her mother who would wake up at dawn
Would take those bowls and leave them in their place.
This Mehshi intensely disliked.
For she likes to do it herself and this was the reason why quarrels take place in the morning
Between Mehshi’s chest and neck
There is a mole being close to her tits
Her mother would kiss it
and cuddle her child
in the right -side ear and cheek
there are newly-formed moles
not only for her
but also for her younger sister
when they both see them
they would go round and round
affection-personified
humming some song.
Mehshia has written about that mole also
In her diary.
And also about her curly strands of hair that
Disturb her sleep in the well of nights.
Things happening and not happening in her life
The imaginary life she leads
She has explained in her diary
But, it is about her mother
That Mehshi had written the most
Mehshia loved her mother so very dearly.
That day Mehshi’s mother, when her daughter was away
Taking out the tomato bowls
And tidying her table
She leafed through the pages of diary
In the pages she opened
Mehshi had written about the awful incidents that Mehshia had to face in the buses.
Her mother required more than a month
To bring her out of that bad experience
After that Mehshi’s mother had turned her daughter into a steely woman
Strong and self-confidant
It is thus she had also shared about a grasshopper lying dead one day
Right from the beginning Mehshi was of the nature to shed tears for trivial things.
In course of time that gifted her with an unshakable heart
Even in the funeral of her mother
Mehshi shed no tears.
That is just a loss but
Her mother has not died
So she keeps telling till date.
Of this Mehshi has not jotted anything
in the diary.
To tell the truth
Since then Mehshi drew nothing
Nor written Diary
Except the strength to bear her dear mother’s demise
Mehshi’s mother has turned Mehshia
a tough resilient child
Ayli ゝ
மேஃஷியா தனது பதினொரு வயதிலிருந்தே டயரி எழுதத் தொடங்கிவிட்டாள்
அதற்கு முந்திய காலங்களிலும் அவள் எழுதியிருக்கலாம்
நிறங்களினால் சுவர்களிளும்,அலுமாரி கண்ணாடிகளில் ஸ்டிக்கர் மூலமாகவும்
எழுதியிருக்கலாம்
மேஃஷியா எழுத்துக்கள் மூலம் மட்டுமே டயரி எழுதுபவள் அல்ல,
பகல் கனவுகளாலும் கற்பனையால் உருவங்களை கொண்டு இயக்குனராகவும் மாறிவிடுவாள்
ஒரு நாள் தனது பூனையை டயரில் வரைய வேண்டும் என்றதற்க்காவே பூனை "க்யூஸி"யை தூக்கிக்கொண்டு தாளில் ஒட்டுவதற்கு அடம்பித்துக்கொண்டிருந்தாள்
அவளுடைய பதினான்கு, பதினாறு வயதுகளில் அரசியல்வாதியாக
வேண்டும் என்று
அவள் தன்னுடைய பேச்சுக்களையும் தன் குணங்களையும் இடைக்கிடையே மாற்றிக் கொண்டவாரே இருந்தாள்
இதனால் அவள் குரல் தடிப்பானதாகவும் மாறியிருக்கலாம்,
மேஃஷியா
பத்திரிகை வாசிப்பதிலும் செய்திகள் கேட்பதிலும் ஆர்வமாக இருந்ததற்கு இதுவே காரணமாக இருக்கலாம்
மேஃஷிய்விற்கு தக்காளி கன்று நடுவதில் ஒரு காதல் உண்டு
ஒவ்வொரு தக்காளிச் செடிக்களுக்கும் செல்லப்பெயர் வைப்பாள், முத்தமிடுவாள், சாப்பாடு ஊற்றி விடுவாள், போதாதற்கு சிறு சிறு துணிமணிகளை போர்த்தி விடுவாள்
மேஃஷி இரவு நேரங்களில் தயிர் சட்டிகளில் இருக்கும்
தக்காளி செடிகளை தான் தூங்கும் கட்டிலின் அடியில் வைத்து விட்டு துயில் கொள்வாள்
அவளுடைய விடியல் சண்டையோடு தான் ஆரம்பமாகும்
அதிகாலையிலே எழும்பும் அவளின் தாய்
அச்சட்டிகளை இருப்பிடத்திலே வைத்து விடுவாள்
இது மேஃஷியாவிற்கு
கொஞ்சமும் பிடிப்பதில்லை
அவளே அதை எடுத்த இடத்தில் வைக்க விரும்புவதால் தான் சண்டைகள் காலையிலே இடம்பெறும்
மேஃஷியின் கழுத்திற்கும் நெஞ்சின் மையத்திற்கும் இடையில் அவள் மார்பகங்களை சொந்தம் கொண்டாடும் மச்சம் உள்ளது
அதில் அவள் தாய் முத்தமிட்டுக் கொஞ்சுவாள்,
வலது புற காதிலும், கன்னத்தில் இப்போது புதிதாக முளைத்த மச்சமுமம் உள்ளது
அது அவளுக்கு மட்டும் அல்ல
அவள் தங்கைக்கும் அதே இடங்களில் மச்சங்கள்
உள்ளன
இருவரும் அதை பார்க்கும் நேரங்களில் அவ்வளோ பிரியா பாச மலர்களாக ஏதோ பாடலுடன் வலம் வருவார்கள்
மேஃஷியா அவ் மச்சத்தை பற்றியும் டயரியில் எழுதி இருக்கின்றாள்
கூடவே தன்னை தூங்க விடாமல் நடுச்சாமங்களில் நித்திரையை குழப்பும் தன் சுருட்டை முடிகளையும் பற்றி எழுதியிருக்கின்றாள்
தனக்கு நடப்பது நடக்காமல் போனது
கற்பனையில் வாழும் தன் வாழ்க்கையையும் குறித்து டயரியிடம் விளக்கம் கொடுத்தும் இருக்கிறாள்
அதிகமாக தன் தாயை பற்றி தான் டயரியில்
எழுதியிருக்கிறாள்
மேஃஷியாவிற்கு தன் தாயின் மீது
அளவு கடந்த அன்பு
அன்று மேஃஷியின் தாய் அவள் இல்லாத போது தக்காளி சட்டிகளை வெளியே எடுத்து விட்டு
குப்பையாக கிடந்த அவள் மேஜையை ஒழுங்கு படுத்தி விட்டு
அவள் டயரியை பிரட்டிப்பார்த்தாள்,
அவள் திறந்த பக்கங்களிலே
மேஃஷியாவிற்கு பேரூந்தில் இடம்பெற்ற மோசமான நிகழ்வை மேஃஷி எழுதி இருந்தாள்
அச்சம்பவத்தில் இருந்து அவளை வெளிக்கொண்டு வருவதற்கு
ஒரு மாதகாலங்களுக்கு மேலாக எடுத்தது
அதன் பின் அவள் தாய் மேஃஷியை
பலமான உறுதியான குழந்தையாக மாற்றியிருந்தாள்
இது போன்று தான் ஒரு வெட்டுக்கிளி இறந்து கிடந்ததையும் பகிர்ந்திருந்தாள்
மேஃஷி ஆரம்பத்தில் இருந்தே
சிறிய சிறிய விடயங்களுக்காக
கண்கலங்கி அழக்கூடியவள்
காலப்போக்கில் அதுவே அவளுக்கு
பலம்வாய்ந்த ஒரு மனதை உருவாக்கியது
அவளுடை தாயின் இறுதி சடங்கிற்கும்
மேஃஷி அழுததேயில்லை
அது ஒரு இழப்பே தவிற தன் தாய் மரணிக்கவில்லை என்றே இன்னும் கூறிக்கொண்டே இருக்கின்றாள்
இது சம்மந்தமாக மேஃஷி தனது டயரில் எதுவும் குறிப்பிடவில்லை
உண்மையை சொல்ல போனால்
அதன் பின் மேஃஷி டயரியோ சித்திரமோ வரைந்ததோ எழுதியதோ இல்லை
அவள் தாய் மரணித்த நிகழ்வை
மேஃஷி தாங்கும் சக்தியை தவிர்த்து
மேஃஷியின் தாய் மேஃஷியாவை
பலமான உறுதியான குழந்தையாக மாற்றியிருந்தாள்
~அய்லி ஸஹ்ரா ~

2 comments:

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE