A POEM BY
IYYAPPA MADHAVAN
All I am asking you is just this:
make me bloom
Bring the Moon
in your smile
Make me feel the stem of Lotus
in the hands that clasp my fingers
Have the smell of rose lingering
in your lips that kiss
Be the soft breeze
in embrace
Turn the nights into beds
and make me fall asleep
Have flowers spread
all over your lap
Fix in your eyes
magnets that entice
Turn yourself into a flower-garden
to pluck and wear
ever so more.
Come to the graveyard and see
I will be sleeping in the memory
of your lullaby.
Iyyappa Madhavan
•
உன்னிடம் பெரிதாக ஒன்றும் கோரவில்லை
உன் சொற்களில்
பூக்களை மலர்த்திவிடு
உன் புன்னகையில்
நிலவைக் கொண்டு வா
என் விரல்களைப் பற்றிக்கொள்ளும் கைகளில்
தாமரைத் தண்டின்
மென்மையை உணரச் செய்
உன் முத்தம் தரும் இதழ்களில்
ரோஜாவின் நறுமணத்தை
வைத்திரு
தழுவிக்கொள்கையில்
மெல்லிய காற்றாய் இருந்துவிடு
இரவுகளைப் படுக்கையாக்கி
உறங்க வை
உன் மடியில் மலர்களைப் பரப்பி வை
உன் விழிகளில் கவர்ந்திழுக்கும்
காந்தங்களைப் பொருத்திக்கொள்
உன்னை ஒரு பூந்தோட்டமாக
மாற்றிக்கொள்
பறித்துப் பறித்துச் சூடிக்கொள்ள
கல்லறையில் வந்து பார்
உன் தாலாட்டின் நினைவில் உறங்கிக்கொண்டிருப்பேன்
No comments:
Post a Comment