TWO POEMS BY
YAVANIKA SRIRAM
the mountain stream rustles
In the library shelf
pebbles roll
In the midst of the heap of
stones thrown
the moan of New Testament
pulled straight and stitched with the
skin-strings of animals
breathe maliciously
Raging and surging out of the bottle
the deluge leaps flowing upward.
Yavanika Sriram
நள்ளிரவில் சலசலக்கிறது
மலையோடை
நூலக அலமாரியில்கூழாங்கற்கள்
உருள்கின்றன
எறியப்பட்ட கற்குவியலின் மத்தியில்
விலங்குகளின் தோல்நாரினால் இழுத்துத்தைக்கபட்ட வேதகாமத்தின் ஈன ஒலி ஆங்காரமாய் வன்மத்துடன்
மூச்சுவிடுகிறது
போத்தலிலிருந்து பீறீட்டுச்சீறி
மேலெழும்பி பாய்கிறது வெள்ளம்.
calling out ‘Wait, ‘Wait’
Dashing against me and screaming “Run Run”
He disappeared from the scene
He who was seated there for ages
asked
What is the toll
Shaken to the core the sky broke apart right in front of
his eyes
and had fallen at his feet
Harvesting the field and after completing the toil
I went to the sea with three dogs at my heels.
With mugs of liquor some were walking in the air
Can’t say for sure but
in my life time
I would have strolled around the globe
more or less thirteen times
To proceed furthermore
I can’t help blushing.
Yavanika Sriram
வழி மறிப்பு
காற்றினும் கடுகி விரைந்து வந்தவனை
இரு இரு என வழிமறித்தேன்
மோதித்தள்ளிவிட்டு ஓடு ஓடு இங்கிருந்து ஓடிவிடு என்று கத்தியபடி
மறைந்துபோனான்
ஆசனத்தில் நெடுநாள் அமர்ந்திருந்தவர்
கேட்டார்
தீர்வை என்ன
நடு நடுங்கி வானம் அவர் கண்முன்பே இடிந்து காலடியில் விழுந்துவிட்டது
வயலை அறுத்து முடித்துவிட்டு மூன்று நாய்கள் பின்தொடர
கடலுக்குப்போனேன்
மதுக்குவளைகளோடு காற்றில் சிலர் நடந்து கொண்டு இருந்தார்கள்
சரியாகத்தெரியவில்லை வாழ்நாளில்
தோராயமாக பூமியை பதிமூன்று முறை கால்நடையில் சுற்றி இருப்பேன்
எதையேனும் சொல்லலாமெனில்
வெட்கம் பிடுங்கித்தின்கிறது.
No comments:
Post a Comment