A POEM BY
THEEPIKA THEEPA
From the sand particle stuck in the blood-soaked sole of a warrior
The dreams of his life lost
remain all faded out
For the eyes turned dry of his dear wife
whom he used to kiss yearly once
this tiny plant may provide solace
The remaining lone shoe of His
might narrate the throbbing pain
of his feet
that, thoroughly fatigued,
walked on and on
to his children.
For his dear family that has lost everything
for the sake of nation
he has now gifted a sapling.
In his nation so dear
In his household where he is no more
standing under the tree in the shade
that his feet had borne
She is going to keep reading
his letters of days bygone
with tear-filled eyes.
The pain of the
price paid for Independence
his family keeps enduring
day in, day out
in silence.
Theepika Theepa
சுதந்திர வலி
-----------------
ஒரு போர்க்கள வீரனின்
குருதியூறிய உள்ளங்கால் மண்துகள்களிலிருந்து
முளைத்தெழுகிற சிறு செடியின் இலைகளில்
அவனது
வாழப்படாத வாழ்வின் கனவுகள்
வெளிறிக் கிடக்கின்றன.
ஆண்டுக்கொருமுறை அவன் முத்தமிட்ட
அவனது மனைவியின்
வறண்டு போயிருக்கும் கண்களுக்கு
இந்த செடி ஆறுதலாயிருக்கலாம்.
மிஞ்சியிருக்கும்
அவனது ஒற்றைச் சப்பாத்து
நடந்து களைத்த அவனது பாதங்களின்
தீரா வலியை
அவனது குழந்தைகளுக்கு சொல்லலாம்.
தேசத்திற்காகவே எல்லாவற்றையும் இழந்த
தனது பிரியத்துக்குரிய குடும்பத்துக்காக
இப்போது
அவனொரு செடியைப் பரிசளித்திருக்கிறான்.
அவன் நேசித்த நாட்டில்
அவன் இல்லாத வீட்டில்
அவனது பாதம் சுமந்த மர நிழலின் கீழ்
அவள்
அவனது பழைய கடிதங்களை
கண்ணீருடன் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறாள்.
சுதந்திரத்திற்காய்
கொடுத்த விலையின் வலியை
அவனது குடும்பம்
அமைதியாய் அனுபவித்துக் கொண்டேயிருக்கிறது
எல்லா நாளும்.
---xxx---
தீபிகா
No comments:
Post a Comment