INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 24, 2022

JEYADEVAN

 THREE POEMS BY

JEYADEVAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

(1)


Last Man
Last Plant
Last Rain
Last Seed
Last Bird
Last Animal _
Is there any such thing?
In the world surrounded by water
even in the last Sun there would be a little one
Today doesn’t end today
Tomorrow doesn’t end tomorrow
This world is destined for perpetuity.
While lying lie like a stone
While rising rise like a bow.
Life is a boomerang.
Where you have left
your son or daughter would grasp it
With wide-opened eyes
even the dead one keeps staring at the sky.
It is there the one dead yesterday
is now
The rain to pour tomorrow might be him,
who knows.

கடைசி மனிதன்
கடைசி தாவரம்
கடைசி மழை
கடைசி விதை
கடைசி புள்ளினம்
கடைசியாய் ஒரு மிருகம் என ஏதும் உண்டா
நீர்சூழ் உலகின் கடைசிச் சூரியனுக்குள்ளும் ஒரு குட்டிச் சூரியன்
இருக்கும்.
இன்றோடு முடிவது இல்லை இன்று.
நாளையோடு முடிவது இல்லை நாளை.
மரணமற்ற பெருவாழ்வுக்கு விதிக்கப் பட்டது இவ்வையம்
கிடக்கும் போது கிட கல்லென
எழும்போது எழு வில்லென
வாழ்க்கை ஒரு பூமராங்.
நீ விட்ட இடத்தில அதைப் பற்றிக் கொள்வான் உன் மகன் அன்றி மகள்.
இறந்தவன் கூட இன்னும் அகல விரித்துப்
பார்த்துக் கொண்டிருக்கிறான் வானத்தை.
அங்கேதான் நேற்று இறந்தவன் இருக்கிறான்
நாளை பெய்யும் மழை ஒருவேளை அவனாகவும் இருக்கலாம்.

ஜெயதேவன்

2. SHE, THE FRIEND OF FISHES
That she had plucked me from amidst the stars
and brought here, mother said.
Buying the dreams of flowers
and melting them she had created me
said my elder sister
That she had sliced me from the cloud and so made me
and because the celestial birds fed me with nectar
I have acquired this marble tinge
Said grandma.
Of the pearls gained
After breaking thousands of shells
I was the most precious ‘Aanimuthu’
And my siblings are still inside sharks
Grandpa would say.
But
My friend Alamu who claims that
she was bought in exchange for barn says
That a sparrow feeds her with honey
Daily.
She climbs on the river-fish and goes to the shop.
The golden bees accompany her till her school and
then leave
A flower and at times a jungle
She is
A flute has bloomed on her body
Even the jelly fish in the fish tank
refuse to play with me
sitting at the window in the multistoried apartment
and catching fish in dream every evening.
Myself metamorphosing into a pot-plant
I being where I am
losing the little girl in me
As the ball static in the marble goblet
There stand still
my evening Sun
and my Sunday vacations.

ஜெயதேவன்

மீன்களின் சிநேகிதி
---------------------------------
நட்சத்திரங்களுக்கிடையே இருந்து என்னைப் பறித்து வந்தததாக அம்மா சொன்னாள்
பூக்களின் கனவுகளை வாங்கி
உருக்கி என்னைச் செய்ததாய்
அக்கா சொன்னாள்
மேகத்திலிருந்து வெட்டி எடுத்து
செய்ததாகவும்
தேவலோகப்பறவைகள் அமுதம்
ஊட்டியதால்தான் எனக்கு இந்தப்
பளிங்கு வண்ணம் என்றும்
பாட்டி சொன்னாள்
கோடி சிப்பிகளை உடைத்து எடுத்த
முத்தில் நான் ஆணி முத்தென்றும்
என்னோடு பிறந்தவர்கள் இன்னும்
சுறாமீன்களுக்குள் இருக்கிறார்கள் என்றும் தாத்தா சொல்வார்
ஆயின்
தன்னைத் தவிட்டுக்கு வாங்கி வந்ததாக சொல்லிக்கொள்ளும்
என் சிநேகிதி அலமு சொல்கிறாள்
தினமும் அவளுக்குத் தேனூட்டி விடுகிறதாம் சிட்டுக்குருவி
அவள் ஆற்றுமீன்களின் மேலேறி
கடைக்குப் போகிறாள்
பொன்வண்டுகள் பள்ளிவரை
வந்து அவளை விட்டுவிட்டுப் போகின்றன
அவள் ஒரு பூவாகவும் சமயங்களில் காடாகவும் இருக்கிறாள்
ஒரு புல்லாங்குழல் பூத்துவிடுகிறது அவள் உடலில்
ஒவ்வொரு மாலைப்பொழுதிலும்
அடுக்குமாடி ஜன்னலோரம் அமர்ந்தபடி கற்பனையில் மீன்பிடிக்கும் என்னோடு
விளையாட மறுக்கின்றன
தொட்டியின் ஜெல்லிமீன்கள் கூட
நானே தொட்டிச் செடியாகி
இரவும் பகலும் கிடக்கிறேன்
கிடந்த இடத்தில் கிடந்து
என்னுள் இருக்கும் சிறுமியை
தொலைத்துவிட்டு
பளிங்கு கிண்ணத்தில் இருக்கும்.
அசையாத பந்தாய் நிற்கிறது
என் மாலைச்சூரியனும்
என் விடுமுறை ஞாயிறுகளும்.

சிநேகிதி என்பதை ஆங்கிலத்தில் எப்படிச் சொல்ல? திணறி முடியாமல் ஒருவழியாய் தலைப்பிட்டிருக்கிறேன். மீன்கள் என்பதற்கு ஆங்கிலத்தில் FISH என்றும் சொல்லலாம், FISHES என்றும் சொல்லலாம்(வெவ்வேறு வகையான மீன்களைக் குறிக்கும்போது FISHES என்று வரும். ஆற்றில் ஒரே வகை மீன்கள் இருக்குமா? வெவ்வேறு வகை மீன்கள் இருக்குமா - எனக்குத் தெரியாது. உங்களுடைய கவிதையின் இறுதி இரண்டு வரிகளின் அர்த்தச் செறிவையும் அழகையும் (ஞாயிறு - சூரியன்; விடுமுறை நாள்)எத்தனை முயன்றும் என்னால் ஆங்கிலத்தில் கொண்டுவர இயலவில்லை. - TRANSLATOR

(3)

Growing flower plants

is not to my liking.
Once I poured a bucket of water
to a flower plant in my garden
Gifting me with blossoms
the plant smiled at me
Now I have bought many a bucket
not for the plant but for the flowers
‘I was walking barefoot along the street
Sans thorns
My friend bought me slippers
saying thorns might prick en route.
Now on days when no footwear available
there are thorns along the way
I used to chat with a lovely lass
of the house adjacent
time and again
Till date I have not seen her beauty
One day she gave me a rose
touching my finger
Now I wait everyday
by the side of the god’s portrait
in my household
for her and for the rose
These days God doesn’t ask
Rose.

ஜெயதேவன்

*பூச்செடி வளர்ப்பது
எனக்கு விருப்பமானது அல்ல
ஒரு சமயம் என் வீட்டுத் தோட்டத்தில்
ஒரு வாளி தண்ணீர்
விட்டேன் ஒரு பூச்செடிக்கு..
பூத்தந்து சிரித்தது செடி
இப்போது செடிக்காக அல்ல
பூவுக்காக வாங்கி வைத்துள்ளேன்
நிறைய தண்ணீர் வாளிகள்
*செருப்பு இன்றி நடந்துகொண்டிருந்தேன்
தெருவில் முள் இல்லை
முள் குத்தும் என்று செருப்பு
வாங்கித் தந்தான் நண்பன்
இப்போது செருப்பு இல்லாத
நாட்களில்
முள் இருக்கிறது வழியில்
*ஓர் அழகான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பேன்
அடிக்கடி...
அவள் அழகை இதுவரை நான்
பார்த்தது இல்லை
ஒரு நாள் ஒரு ரோஜாவை விரல் தொட்டுக் கொடுத்தாள்
என் வீட்டு சாமி படத்திற்காய்
இப்போது
ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறேன்.
அவளுக்காகவும் ரோஜாவுக்காகவும்
சாமி இப்போது கேட்பதில்லை
ரோஜாப் பூ

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE