INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Monday, January 24, 2022

VATHILAIPRABHA

 A POEM BY

VATHILAIPRABHA

Translated into English by Latha Ramakrishnan
(*First Draft)
Poetry remains alien to him
This World
Earth, Sky, Bird
She
Everything remains alien.
Not within the reach
Sky and Poetry.
For the lads flying kites
the very sky is Poetry.
For those revelling in fishing
the river is Poetry.
For the boatman, the Sea.
He keeps searching in the blank sheet
The poem meant for him
is not in there in the paper
White sheet white cloud
Sky
and so
for he who sleeps messing upthe stars
Dream is Poetry.
For he who yearns for a poem
One eon won’t suffice.
Though he knows not how to write
He knows how to live Life
as sheer Poetry!

VathilaiPraba
*
கவிதை அவனுக்கு
அந்நியமாயிருக்கிறது..
இந்த உலகம்
மண், வானம், பறவை
அவள்
எல்லாமும் அந்நியம்தான்.
கைக்கெட்டும் உயரம் இல்லை
வானமும், கவிதையும்.
பட்டம்விடும் சிறுவர்களுக்கு
வானமே கவிதை.
மீன் பிடித்து விளையாடுகிறவர்களுக்கு
நதி கவிதை.
படகோட்டிக்கு கடல்.
அவன் வெற்றுக் காகிதத்தில்
துழாவிக் கொண்டிருக்கிறான்.
அவனுக்கான கவிதை
காகிதத்தில் இல்லை
வெண் காகிதம் வெண் முகில்
வானம்
என
நட்சத்திரங்களைக் கலைத்தபடி
உறங்குகிறவனுக்கு கனவு கவிதை.
ஒரு கவிதைக்கு
ஏங்குகிறவனுக்கு
ஒரு யுகம் போதாது..
அவனுக்கு எழுதத் தெரியாவிட்டாலும்
வாழ மட்டும் தெரிகிறது
கவிதையாக...!

வதிலைபிரபா

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE