A POEM BY
ABDUL JAMEEL
Closing the tea shop
I come away
Even after locking the shop
Ants wait in row
In tea (work)shop
They waiting in front of the
sugar-filled bottle
with lid tightly closed
sinking into darkness
still waiting
_ Know not how to handle these ants.
Their enduring hunger
instills in me a sense of guilt
as I proceed to eat
For the specks of sugar
that would slip off the table spoon
absentmindedly
till dawn
not getting disheartened
with hope in tact
the ants wait
in row accurate.
Abdul Jameel
நம்பிக்கை சிதறாமல்
காத்து நிற்கும் எறும்புகள்
_____________________________
தேநீர் கடையினை
அடைத்து விட்டு வருகிறேன்
கடையை மூடிய பின்னரும்
தேநீர் பட்டறையில் வரிசையில்
காத்து நிற்கின்றன எறும்புகள்
இறுக மூடி வைகப்பட்டிருக்கும்
சக்கரை நிரப்பபட்ட
போத்தல் முன்பாக
இருளில் மூழ்கியபடி காத்து நிற்கும்
எறும்புகளை என்ன
செய்வதென்றுதான் புரியவில்லை
அதன் தீராப் பசி
சாப்பிடச் செல்லும் என்னை
உறுத்தாமல் விடுமா என்ன
மேசைக் கரண்டியிலிருந்து
கவனக் குறைவால்
சிந்தும் சக்கரைகளுக்காக புலரிவரை
நம்பிக்கையினை சிந்த விடாமல்
நிரை குலையாது
காத்திருக்கின்றன எறும்புகள்
0
No comments:
Post a Comment