TWO POEMS BY
ANBIL PIRIYAN
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
(1)
I come to see you
With
Bouquet flower-brimming
Dreams colourful
A few parched clouds
Tales unforgettable
Wounds ever bleeding
I come to see you
You are there they said
But you aren’t in that abode
Just a little girl resembling thee
is there
She too bears your name.
அன்பில்பிரியன் அன்பில்பிரியன்
நெடுங்காலத்திற்கு
பின்
உன்னை காண வருகிறேன்
நிறைய பூங்கொத்துடன்
வண்ண கனவுகளுடன்
கொஞ்சம் உலர்மேகங்களுடன்
மறக்க முடியா பழைய கதைகளுடன்
ஆறாத காயங்களுடன்
உன்னை காண வருகிறேன்
நீ அங்குதான்
இருப்பதாக சொன்னார்கள்
ஆனால் அந்த முகவரியில்
நீ இல்லை
உனது சாயலில்
ஒரு சிறுமி மட்டும் இருந்தாள்
அவளுக்கும் உனது பெயரே.
(2)
It is the final grip
Daughter is not a mere word
She is your God
foremost and ultimate
who would never forsake thee.
Daughter is not a mere word
It is the meaning of your being here.
Daughter is not a mere word
It is your lungs contracting and expanding.
Daughter is not a mere word
It is balm for wounds that remain unhealed;
wide-open.
Daughter is not a mere word
It is the Lord’s tears of joy..
Daughter is not a mere word.
It is poem being written sobbing.
Daughter is not a mere word
It is poem being read with the heart melting.
Daughter is not a mere word
It is your own exclusive space
Daughter is not a mere word
It is your consummation.
Daughter is not a mere word
It is a lovely nest where divine beings
toddle
Daughter is not a mere word
It is the very You
Daughter is not a mere word
She is a little mother who goes beyond Mother
With no difficulty whatsoever.
அன்பில்பிரியன் அன்பில்பிரியன்
மகள் என்பது ஒரு சொல் அல்ல
கடைசி பிடிமானம்
மகள் என்பது ஒரு சொல் அல்ல
உன்னை இம்மியளவும் கைவிடாத
முதலும் கடைசியுமான கடவுள்
மகள் என்பது ஒரு சொல் அல்ல
நீ இங்கு வந்ததன் பொருள்
மகள் என்பது ஒரு சொல் அல்ல
நுரையீரல் நுண்குழல் சுருங்கி விரிவது
மகள் என்பது ஒரு சொல் அல்ல
ஆறாது திறந்தே கிடக்கும் காயங்களுக்கான களிம்பு
மகள் என்பது ஒரு சொல் அல்ல
தேவனின் ஆனந்த கண்ணீர்
மகள் என்பது ஒரு சொல் அல்ல
அழுதுகொண்டே எழுதப்படும் கவிதை
மகள் என்பது ஒரு சொல் அல்ல
கசிந்துகொண்டே படிக்கப்படும் கவிதை
மகள் என்பது ஒரு சொல் அல்ல
உனக்கான வெளி
மகள் என்பது ஒரு சொல் அல்ல
உன் பூரணம்
மகள் என்பது ஒரு சொல் அல்ல
தேவதேவ கணங்கள் தத்தும்
அழகியகூடு
மகள் என்பது ஒரு சொல் அல்ல
நீயே அது
மகள் என்பது ஒரு சொல் அல்ல
அம்மாவினை சர்வசாதாரணமாக
கடக்கும் குட்டி அம்மா.
No comments:
Post a Comment