A POEM BY
SIVASEKARAN
tell the world
When your gun aimed at my
head bent
the tale turned into a poem
Growing terribly restive
when the hands trembled
parting with the Poem
a word landed at your feet
While collecting the letters of the
scattered word
one by one
Your gun
turned towards my heart
Now which should I first tell
to you and the world as well
சிவ சேகரன்
//
உலகுக்கு சொல்வதற்கு
என்னிடம் இருந்தது
ஒரு கதை
கவிழ்க்கப்பட்ட
எனது தலையை
உனது துப்பாக்கி குறிபார்த்த போது
கதை கவிதையாகி கொண்டது
உள்ளம் பதறி
கைகள் நடுங்கியபோது
கவிதையிலிருந்து பிரிந்து
உனது காலடியில் விழுந்தது ஒரு சொல்
சிதறிக் கிடந்த
சொல்லின் எழுத்துகளை
ஒவ்வொன்றாக பொறுக்கி கொண்டிருக்கையில்
உனது குறியை
திரும்பிக்கொண்டிருந்தாய்
என் இதயத்துக்கு
இப்போது நான்
முதலில் எதைச்சொல்வது
உனக்கும் உலகுக்கும்?
No comments:
Post a Comment