A POEM BY
SHARMILA VINOTHINI
in the all too dense rain of ’Karthigai’
that the pregnant sky
pouring incessantly
dissolves and disappears.
The droplets of sand scattered from the tombs
dug and thrown away
sobs dissolving in the rain
Remembering the flowers strewn some day far away
the ‘Poovarasu’ by the fence
showers its leaves and swings its branches.
Words uttered inside mouths shut
and songs sung
light the lamp in hearts aplenty.
In the smiles that the faces seen in the wreckage
attacked and smashed
give out
the great grand Timespace is resurrected.
• Whoever it be, after death the body should be treated with due respect and dignity. This is the hallmark of human excellence. And, this is the greatest virtue and the noblest trait of the soldiers of a Land.
SHARMILA VINOTHINI.
காலப் பெருவெளி
கருக்கொண்ட வானம்
இடைவிடாது பொழிகின்ற கார்த்திகை அடைமழையில்
சாலையைக் கடக்கின்ற தாயின் கண்ணீர்க்கோடு
கரைந்து மறைகின்றது.
தோண்டி எறியப்பட்ட கல்லறைகளில் இருந்து
சிதறி விழுந்த மணற்துளிகள்
மழையில் கரைந்து அழுகின்றன.
அன்றொருநாள் தூவப்பட்ட
பூக்களின் நினைவுகளில்
வேலியோரப் பூவரசு
இலைகளைச் சொரிந்து
தன் கிளைகளை அசைக்கின்றது.
மூடிய வாய்களுக்குள் பேசப்படும் வார்த்தைகளும்
இசைக்கப்படும் கீதங்களும்
உள்ளங்களில் தீபம் ஏற்றுகின்றன,
அடித்தும் உடைத்தும் வீசப்பட்ட
சிதிலங்களில்
தெரிகின்ற முகங்களில்
சிந்தப்படும் புன்னகையில்
உயிர்க்கிறது காலப்பெருவெளி.
சர்மிலா வினோதினி.
யாராக இருந்தாலும் மரணத்தின் பின்பு அந்த உடலுக்குரிய மரியாதையை செலுத்துவது மனித மாண்பு, அதுவே ஒரு நாட்டு வீரனின் உன்னத பண்பும் உயரிய ஒழுக்கமுமாகும்.
No comments:
Post a Comment