TWO POEMS BY
BRINDHA SARATHY
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
overwhelmed
Visiting your town
For a death
Came to stand at your threshold
Impulsively,
unable to cross the great distance of Time
feeling uncertain, falteringly.
Waking up from the afternoon nap
arranging your attires properly
with eyes opening wide
filled with the pleasant surprise of
the unexpected visit of the unexpected
you welcomed me
and insisted that I have lunch there.
Refusing
I kept saying that I had a hefty lunch just then.
Saying ‘Don’t lie again and again
All too suddenly
You held my hand and smelt it - yes
At that moment
one and all emotions of those times
doubly alive surging
reached the peak
In the split-second
you would have realized that
there was no flavour in my food
Yet
the fragrance of your love
the bygone time notwithstanding
your breath proclaimed afresh
in my palm.
In this noontime bus with just a few
I move on
smelling my palm smelt by thee
every now and then
Defeated by the cruel fate
of not being able to wed you
whimpering hungrily
accompanies
my cowardice.
P.S: Kayachandigai is a character in the great Tamil epic Manimekalai. Wife of Vidhyadharan she was afflicted with insatiable hunger and in the end getting food from Manimekalai relieved of her curse.
காயசண்டிகை என்பவள் காஞ்சனன் என்ற வித்தியாதரன் மனைவி; ஆனைத்தீ என்னும் பசிநோய் உற்று, மணிமேகலையிடம் உணவு பெற்று நோய் நீங்கியவள்.
காயசண்டிகை
*
பிருந்தா சாரதி
*
திக்குமுக்காடிப் போனேன்
ஒரு கணம்.
ஒரு துக்க நிகழ்ச்சிக்கு உனதூர் வந்தவன்
சொல்லாமல் கொல்லாமல் திடீரென உனதில்லம் வந்து நின்றேன்
கால இடைவெளியின்
தூரம் கடக்க இயலாது
தயங்கித் தயங்கி.
பின் மதிய உறக்கம் கலைந்து எழுந்து
அவசரமாய் உடை திருத்தி
எதிர்பாராதவனின்
எதிர்பாரா வருகை தந்த
வியப்பு வழியும் விழிகள் விரிய வரவேற்று
மீண்டும் மீண்டும் உணவருந்தச் சொல்லி வற்புறுத்தினாய்.
வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டுத்தான் வருகிறேன் எனச் சொல்லிக்கொண்டே இருந்தேன் நான்.
பொய் சொல்லாதே
மறுபடி மறுபடி எனச் சட்டென்று
என் கை பற்றி உள்ளங்கையை
நாசியில் வைத்து முகர்ந்தாயல்லவா ?
உயிர்த்திருந்த காலங்களின் உணர்வு நிலைகளில் எல்லாம்
உச்சம்தொட்டது அக்கணம்.
ஒரு
நொடியின் பிசிறில்
என் உணவில் மணமில்லை என்பதை
நீ உணர்ந்திருக்கக் கூடும்.
ஆயின்
உனதன்பின் நறுமணத்தை
காலம் தாண்டியும் சொல்லியதுன் சுவாசம்
என் உள்ளங்கையில்.
கூட்டமில்லா
இந்த மதிய நேரப் பேருந்தில்
நீ முகர்ந்த
என் உள்ளங்கையை
மீண்டும் மீண்டும் முகர்ந்தபடியே பயணிக்கிறேன்.
உன்னைக் கரம் பற்ற இயலா விதியின் முன்
பசியோடு விசும்பியபடி.
கூடவே வருகிறது
என் கோழைத்தனம்.
Two pebbles that accidentally met
along the course of the flowing river
rubbing against each other
mutually feeling
and embracing
learnt the fact
that they both had come rolling down
the same peak
and are driven towards the same
depth.
Realizing that
the state of separation
and that of union
are but law written o the flowing water
turning shell-shocked
they are smashed into pieces.
Turning mutually deep-rooted
with love frozen in silence
having gained the boon of
living beyond eons
as sand grains
they the rays of Sun
piercing through the river
make shine
in diamond-like radiance.
Brindha Sarathy
இரண்டு கூழாங்கற்கள்
*
நதியின் பாய்ச்சலில் எதிர்பாராமல்
சந்தித்துக் கொண்ட
இரண்டு கூழாங்கற்கள்
ஒன்றை ஒன்று
உரசி
தீண்டி
தழுவி
அறிந்துகொண்டன
தாம் இருவரும்
ஒரே சிகரத்திலிருந்து
உருண்டு வந்தவர்கள் என்பதையும்
ஒரே ஆழத்தை நோக்கி
செலுத்தப்படுபவர்கள் என்பதையும்.
பிரிவின் ஸ்திதியும்
உறவின் கதியும்
ஓடும் நீரில் எழுதப்பட்ட விதி
என்பதை அறிந்து திகைத்து நொறுங்கி
பொடிப் பொடியாகின்றன
மணல் துகள்களாய்
மௌனத்தில் உறைந்த காதலுடன்.
ஒன்றில் ஒன்று ஊடுருவி
யுகங்களை கடந்து வாழும்
வரம் பெற்றுவிட்ட
அவற்றை
வைரம் போல்
மின்னவைக்கின்றன
நதியின் ஆழத்தை ஊடுறுவும்
சூரியனின் கிரணங்கள்.
*
பிருந்தா சாரதி
No comments:
Post a Comment