A POEM BY
KARUNAKARAN SIVARASA
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
is a star not of the sky
a bird not flying in the space
a flower not sprouted in wilderness
a fish not swimming in the sea
an aroma not stirred in the air
a face not seen in dream
an incident not happening en route
the shadow of a love moving away midway
a paddy grain not born of the soil
a fruit not ripened in tree
a God not stationed in the shrine
a diamond not radiant in light
a Love not lucent in affection pristine
a teardrop collecting not in the eyes _
When she said that
your weight reduced by half
And,then
all words
abandoned you.
Karunakaran Sivarasa
தன்னிடம் இருப்பதெல்லாம்
வானில் தோன்றாத ஒரு நட்சத்திரம்
வான்வெளியில் பறக்காத ஒரு பறவை
காட்டில் பூக்காத ஒரு மலர்
கடலில் நீந்தாத ஒரு மீன்
காற்றில் எழாத ஒரு மணம்
நினைவில் வராத ஒரு பெயர்
கனவில் தெரியாத ஒரு முகம்
வழியில் நிகழாத ஒரு சம்பவம்
பாதியில் விலகும் ஒரு அன்பின்நிழல்
மண்ணில் விளையாக ஒரு நெல்மணி
மரத்தில் பழுக்காத ஒரு கனி
கோயிலில் நிலைபெறாத ஒரு தெய்வம்
ஒளியில் மிளிராத ஒரு வைரம்
அன்பில் தெளியாத ஒரு காதல்
கண்களில் திரளாத ஒரு நீர்த்துளி
என்றவள் சொன்னபோது
உங்களின் பாதி எடை குறைந்தது
அப்பொழுது
எல்லாச் சொற்களும்
உங்களைக் கை விட்டன.
No comments:
Post a Comment