INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Sunday, December 26, 2021

KADANGANERIYAN THAMIZHNAADU

 A POEM BY

KADANGANERIYAN THAMIZHNAADU

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Inside the bottle gifted by
He who has crossed the sea
In search of a livelihood
His sweat curl into waves
With affection and fatigue flooding I open it.
The salty taste of the tender-coconut
of the coconut-grove
grown with great difficulty in the Arabian soil
and sadly uprooted by the gale
climbs down crossing the cheek bones
One energy cannot be converted into another
Kinematics notwithstanding, tears swell
The life-giving trees falling
turning the peasant’s life upside down
and he feeling totally forsaken _
The ruler citing as reason
the awful season
refuses to inspect the heavy loss borne
and to his ivory tower returns.
Season would betray
But not Truth Eternal any day
For the searching queries of their tears
the successive generations should be
the response.
That which is eaten
and taken
are but just a little
Those stolen
cheated
overpowered by brutal power
and so amassed _
For enjoying it all
the successive generations
should be hale
By way of atonement
for the wrongs mistakes and betrayals
that we have committed so far
let’s plant tree-saplings
When we realize our mistakes and redeem ourselves
the storms would stand well within their limits
and we be strolling in our land.

கடங்கநேரியான் தமிழ்நாடு

பிழைக்க கடல் கடந்தவன் பரிசளித்த போத்தலுக்குள் அவனது வியர்வை அலையாடுகிறது.
அன்பும் அயர்ச்சியும் பெருகியோட அதனைத் திறக்கிறேன்.
அரபு நிலத்தில் பாடுபட்டு உருவாக்கி
புயல் சாய்த்துப்போட்ட
தென்னந் தோப்பின் இளநீரின்
உப்புச் சுவை
கன்னக் கதுப்புகளைத் தாண்டி கீழிறங்குகிறது.
ஒன்றை மற்றொரு ஆற்றலாக உருமாற்றம் செய்யவியலாது
இயங்கியல் விதியை மீறிக் கண்ணீர் ததும்புகிறது
இயலாமையில்.
வாழவைத்த மரங்கள் வீழ
நிலை குலைந்த குடியாவனின் சேதாரத்தை பார்வையிட மறுத்து திரும்புகிறான்
அரசாளுபவன் பாதகமான பருவத்தைச் சுட்டி.
பருவங்கள் பொய்க்கும்
சத்தியம் பொய்க்காது
கண்ணீரின் கேள்விக்கு அடுத்தடுத்த தலைமுறைகளை பதிலாக்கியாக வேண்டும்.
உண்டதும்
கொண்டதும்
களித்ததும் மிகச் சிறியவை
உழைத்து
களவாடி
ஏமாற்றி
பலத்தால் வீழ்த்தி
சேர்த்த யாவற்றையும் அனுபவிக்க தலைமுறைகள் நல் வாழ்வுடன் இருக்க வேண்டும்
இதுவரை செய்த
தவறுகளுக்கு /துரோகங்களுக்கு ஈடு செய்ய மரக் கன்றுகளை நடவு செய்வோம்.
தன்னையுணர்ந்து நாம் திருந்தும் போது
புயல்கள் தம் எல்லையில் நிற்கும்
நாம் நம் நிலத்தில் நடைபயில்வோம்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024