INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, December 24, 2021

SHANMUGAM SUBRAMANIAM

 A POEM BY

SHANMUGAM SUBRAMANIAM

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

Come one day said thee
That day came and gone
Confusion-confounded
This could not be the reason
for my sharing nothing to none
today
Each time you call me in the same vein
Despite hoping that this wouldn’t be the same as before
Despite setting out with extra prudence
Somehow it makes you stumble
The reason collapsing on seeing the bizarre appearance
of the zodiac circle
revolving at the back of the astrologer
predicting that the day is going to be very good
If I were to leave without being aware of it
not taking leave of you
Maybe we would meet
Without seeing the calendar
in advance
Without wearing the wristwatch
I set out at seven in the morn
forgetting the Television.
The tip of my finger pressing your calling bell
TV in the reception hall
The same Zodiac circle revolving
anti-clockwise
morning 7 o’clock
the rose tinge of your palms
in the coffee mug
at this instant.
Shanmugam Subramaniam

ஒருநாள் வந்துசெல் என்றாய்
அந்நாள் செய்வதறியாது போனது
யாருடனும் இன்று எதையும் பகிரா
ததற்கு
இது காரணமாக வாய்ப்பில்லை
ஒவ்வொருமுறையும் அதேபோல்தான் அழைக்கிறாய்
இது முன்போல் நேராது என்று நம்பினாலும்
அதிகவனத்துடன் கிளம்பினாலும்
எப்படியோ காரணமின்றி இடறிவிடுகிறது
நன்நாள் இன்றென
தொலைக்காட்சியில் காலை ஏழுமணிக்கு
பலன்சொல்பவரின் பின்சுழலும் இராசிசுழலவட்டத்தின்
தோற்ற விசித்திரத்தில் காரணம் மயங்கிவிட
நானும் கிளம்புவதாக எண்ணிக் கொள்ளாமல்
உனக்கும் அறிவிக்காமல் கிளம்பினால்
சந்தித்துவிடலாமோ என்னவோ
முன்னோட்டமாக
நாட்காட்டியை பார்க்காமல்
கைக்கடிகாரத்தை அணியாமல்
காலை எழுமணிக்கு தொலைக்காட்சியை மறந்துவிட்டு
கிளம்பினேன்
உன் இல்லத்து அழைப்புமணியின் விசையில்
அழுந்திய என் விரல்நுனி
வரவேற்பறையில் தொலைக்காட்சி
அதே இராசிசுழல்வட்டம் எதிர்ச்சுழற்சியில்
காலை எழுமணி
உன் உள்ளங்கைகளின் ரோஜாவண்ணம்
காப்பிக் குவளையில்
இந்நேரம்.
- எஸ்.சண்முகம் -

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024