INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, November 10, 2021

ZEENAT

 THREE POEMS BY

ZEENAT

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

1

Carving an ultrafine sculpture of a female in the nude
toiling for days at a stretch
She placed it upon a podium
amidst plants with flowers of myriad hues.
Accolades and adverse reviews
She wrote in separate notebooks.
There were those
who after relishing it secretly
had abused and ostracized her.
There was no dearth for sarcastic comments
And whispers aplenty.
Feeling fatigued and lost
She clothed her sculpture
But it was ripped off
non-stop.
Worn-out to the core
wrapping it with a white cloth
she hid it in the innermost recess.
After a few days
the sculpture had started cracking
with the stench of semen.

நுட்பமான
நிர்வாண பெண் சிலையை
நெடுநாட்களாய் கவனமாகச் செதுக்கி
பல வண்ண மலர்கள் பூத்த செடிகளின் நடுவே
அழகான பீடத்தில் வைத்தாள் .
பாராட்டுகளையும்
விமர்ச்சனங்களையும்
தனித்தனி குறிப்பேட்டில் எழுதினாள்.
ரகசியமாக இரசித்துப் பின்
அவளைத் தூற்றி
விலக்கி விட்டோரும் உண்டு.
செவிகூசும் கிண்டல்களுக்கும் ,
கிசுகிசுக்களுக்கும் பஞ்சமில்லை.
சோர்ந்து போய்
அவளின் ஆடைகளை சிலைக்கு உடுத்த
அது மீண்டும் மீண்டும் துகிலுரியப் பட்டுக் கொண்டேயிருந்தது.
சலித்துப் போய்
ஒழிப்பறையில் வெண்ணிற துணியால் மூடினாள்.
சில நாட்களுக்குப்பின்
பூட்டிய அறையில்
விந்தின் நெடியால்
கீறல்கள் விடத்தொடங்கியிருந்தது சிலை.
---------- ஜீனத்


2. VEILED HEART

In a room of a house where an event
had taken place
in between conversing
feeling so sweaty
removing the burka
and hanging it on the clothesline
in the backyard,
the other burkas followed suit.
With some key unlocking the women’s hearts
there scattered all over the room
loads of distress
With the weight of the burkahs drenched
in the ensuing torrential downpour
proving unbearable
the clothesline, torn,
came crashing down.

மனம்மறைக்கும்மேலாடை

நிகழ்ச்சியொன்று
நடந்துமுடிந்த
வீட்டின்அறையில்
பேச்சின்நடுவே
புழுக்கமாயிருக்கிறதென
பர்தாவைகழற்றி
பின்கட்டிலிருந்தகொடியில்போட
வரிசையாய்வந்தமர்ந்தன
பிறபர்தாக்கள்.
ஏதோஒருசாவி
குழுமியிருந்தபெண்டிரின்
அகம்திறக்க
அறையெங்கும்சிதறின
துயரக்கட்டுக்கள்
பெய்துதீர்த்தபெருமழையில்
நனைந்தபர்தாக்களின்
கனம்தாளாது
அறுந்துவீழ்ந்ததுகொடி


3. THE WAIT
It could be
while a bud is unfolding into a blossom
or when hearing that a little girl
was sexually assaulted
or while being enthralled in the twinkling star
or while witnessing the death of a militant
on the small screen
When the love-birds revel merrymaking
the lover’s body lying in shreds on the rail track
somewhere
while going around a flower show
or
a farmer who has committed suicide with his family
_Anything could be the reason
for that
Or else
in a moment of insanity
when I stand a split personality
divided into this or that _
in that delirious state
My Poem might originate.

காத்திருப்பு

மொட்டொன்று பூவாக மலரும்போதோ
சிறுமியொருத்தி பலாத்காரம் செய்யப்பட்டதை அறியும்போதோ
அல்லது
நட்சத்திரங்களின் மினுமினுப்பில்
கிறங்கிக் கிடக்கையிலும்
தொலைக்காட்சியில்
போராளியொருவனின் மரணத்தைக்
கண்ணுறும் சமயமாகவும் அது இருக்கலாம்
காதல் பறவைகள் களிப்புறும் நேரம்
எங்கேனும் ஒரு தண்டவாளத்தில்
சிதறிக் கிடக்கும் காதலனின் உடல்
மலர்க் கண்காட்சியொன்றை சுற்றிப் பார்க்கும்
தருணம்
அல்லது
குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட உழவன்
இவற்றில் எது வேண்டுமானாலும்
அதற்குக் காரணமாகலாம்
இல்லையேல்
இதுவாக அதுவாக பிளந்து நிற்குமொரு
பைத்தியநிலையில் பிறக்கக்கூடும்
என் கவிதை.

அறிந்திடாத இரவு - ஜீனத்


No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024