A POEM BY
UMA SHANIKA
The heat of the raging fire within must’ve burnt its body.
The image of the house dwelt in long ago
must be all dark in slumber
inside its frightened eyes
My desires that sprouted
must have been caught in the bushy fur
and choked to death
coming apart and dropping one by one.
The cat might have walked amidst the tiles
and escaped
Or with its body torn in an accident,
breathed its last.
In the all too vast space of absolute Nothingness
Eyes keep blinking.
Uma Shanika
•
தொலைத்தது ..
என் கனவுப்பூனை
வீறிட்டுக் கத்திப்
பாய்ந்து ஓடியது.
மனதில் கொதித்தெழும்
அனலின் வெப்பம்
அதன் உடலை எரித்திருக்கும்
எப்போதோ வாழ்ந்த வீடொன்றின்
விம்பம்
அந்த மிரண்ட கண்களுக்குள்
தூங்கி இருண்டிருக்கும்
துளிர்த்த என் ஆசைகள்
ரோமப் புதருக்குள்
சிக்கிச் செத்து
ஒவ்வொன்றாய் உதிர்ந்திருக்கும்.
அந்தப் பூனை
ஓடுகளிடையே
நடந்துத் தப்பித்திருக்கலாம்
அல்லது
விபத்தில் உடல் கிழிபட்டு
இறந்தும் இருக்கலாம்.
எதுவுமற்ற
பெருவெளிக்குள்
கண்கள்
மூடித் திறக்கின்றன.
உமா
05.10.2021
No comments:
Post a Comment