INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Friday, November 12, 2021

MARIMUTHU SIVAKUMAR

 A POEM BY

MARIMUTHU SIVAKUMAR

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)



RED TRAILS STUCK ON THE SCREEN


I enter into a studio
For taking a still photograph.
Casting aside memories
I start searching for a beautiful back screen
Such a screen came into view.
In that screen with hundreds of teardrops reddening
moisture has spread
In those red trails
particles of thousands of agonies
silent
have turned into still photograph.
Choosing the screen I set out to take a picture.
A person who entered into the cabin then
insisted that he be given my ink-coated little finger
and stood there stubbornly.
Finally I tried severing that finger
for offering it to him.
That man took a photograph with that finger
for the next hunt for vote
Several more red droplets
start gathering on the screen surrounded by mountains.

திரையில் படிந்த சிவப்பு தடங்கள்.

நிழற்படம் எடுப்பதற்காக ஸ்டூடியோ ஒன்றிற்குள் நுழைகிறேன்.
ஞாபகங்களை விலக்கியபடி
அழகான பின் திரையொன்றை
தேட தொடங்கினேன்..
எனக்கு பிடித்த ஒரு திரை கண்களில் பட்டது.
அத்திரையில் பலநூறு கண்ணீர் துளிகள் சிவந்து
ஈரம் படர்ந்திருந்தது.
அச்சிவப்பு தடங்களில்,
மறைந்துப்போன
ஆயிரமாயிர வேதனைகளின் துகள்கள்
மெளனித்து படமாகிக் கிடந்தன.
நான் அத்திரையினை தெரிவாக்கிக்கொண்டு
படம் பிடிக்க தயாரானேன்.
அப்போது அறைக்குள் நுழைந்த ஒருவர்,
எனது மைபூசப்பட்ட
அந்த சிறுவிரல் தனக்கு வேண்டுமென அடம்பிடித்து நின்றார்.
இறுதியாக அவரிடம்,
அவ்விரலினை வெட்டி கொடுக்க முயன்றேன்.
அம்மனிதர்
அடுத்த வாக்கு வேட்டைக்காக
அவ்விரலுடன் தான் புகைப்படமொன்றை பிடித்துக் கொண்டார்.
மேலும் சில சிவப்பு துளிகள்
மலை சூழ்ந்த திரையில்
படியத் தொடங்கியது.
~~~
10.11.2021
மாரிமுத்து சிவகுமார்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - MARCH - APRIL, 2024 ISSUE