A POEM BY
IYYAPPA MADHAVAN
While agreeing with what someone says
They would dance in tune with the words uttered.
if someone conversed affectionately
it would curl and swirl like dog’s
wagging tail
If abuse means
reddening it would dance in frenzy.
When a koel sings
feeling startled by the loud noises
entrenched in silence
It would shrink and curl into a snail.
Hearing sobs
It would stand stunned
In the sounds of laughter
It would softly smile to itself.
Listening through its tiny holes
abuses invectives insults
these small ears
are unable to sense the secrets
murmured
yet he keeps teaching those tiny ears
to insert themselves into the hole in the door
and overhear
Soon they would become an expert in this art
Henceforth ears where words collide
might grow all too wide.
அவனுக்கு சின்னக் காதுகள்
யாராவது பேசுவதை ஆமோதிக்கிறபோது
சொற்களுக்கேற்றவாறு
நர்த்தனம் புரியும்
அன்பாக உரையாடியானால்
நாய் வாலைப் போல சுழற்றும்
வசைச்சொல்லென்றால்
சிவந்து சிவநடனம் புரியும்
ஒரு குயில் கூவுகிறபோது
அமைதியில் உறையும்
பெரிய சத்தங்களில் திடுக்கிட்டு
நத்தையைப் போல் சுருண்டுவிடும்
அழுகைக்குரல் கேட்கையில்
செய்வதறியாது திகைத்துப்போகும்
சிரிக்கும் ஓசைகளில் மெதுவாய்
புன்னகைத்துக்கொள்ளும்
அவதூறுகளை
தூற்றுதல்களை அவமானங்களை சிறுஓட்டைகளில் செவிமடுக்கும்
இந்தக் குட்டிக்காதுகளால்
முணுமுணுக்கப்படும் ரகசியங்களைதான் புலனுறு முடிவதில்லை
இருப்பினும் சின்னக்காதுகளை கதவுத்துவாரங்களில் புகுத்தி
ஒட்டுக்கேட்க கற்பித்து வருகிறான்
விரைவில் சாமர்த்தியத்திற்கு
வந்துவிடும் இனி
சொற்கள் மோதும் காதுகள் பெரிதாக வளர்ந்துவிடக்கூடும்.
No comments:
Post a Comment