INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, November 10, 2021

FATHIMA MINHA

 A POEM BY

FATHIMA MINHA


Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

While trying to reach and go beyond the shore yonder
a giant wave keeps chasing forever.
Or
in the manner of a gentle hug
falling on the head and tears off
as watery wastes.
Those forsaking their run ahead
halting to ask why
get lost one by one.
Even to say ‘Keep running’
No time.
That each one has different waves to cross
only the Sea knows.
Upon the crystal glittering as salt pans
on one corner of the stream
Sun smiles as slabs of shine.
The great distance of Survival
brimming on the surface of water endless
rustles the Time.
Fathima Minha

அக்கரையை நீந்திக்கடக்க எத்தனிக்கையில்
ஒரு பேரலை எப்போதும் துரத்தியடித்துக்
கொண்டிருக்கிறது
அல்லது
ஆதூரமாய்த் தழுவிக்கொள்வதாக
தலை மேல் வீழ்ந்து
நீர்ச்சிதிலங்களாய்க் கிழிகிறது
முன்னே ஓடுவதைக் கைவிட்டு
ஏன் என்பதாக நிறுத்திக் கேள்வி கேட்டவர்கள் ஒவ்வொருவராக
தொலைந்து போகின்றனர்
ஓடிக்கொண்டேயிரு
என்பதனை நிறுத்திச் சொல்லவும்
இங்கு அவகாசமிருப்பதில்லை
ஒவ்வொருவருக்கும் தாண்டுவதற்கு
வெவ்வேறு அலைகள் என்பதனை
கடல் மட்டுமே அறிகிறது
ஓடையினோரம் உப்பளத்தேக்கமாய் மின்னும் பளிங்கின் மீது வெய்யில்
பாளங்களாய்ச் சிரிக்கின்றது
பிழைத்தலின் தூரம்
எல்லையற்ற நீர்ப்பரப்பில் ததும்பி
காலத்தை சலசலக்கிறது

~மின்ஹா.






No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024