A POEM BY
IYARKKAI
Translated into English by Latha Ramakrishnan(*First Draft)
MUNIFICENCE
(1)
Dragonflies whirl in the rain
I see the rain pouring softly
Not weighing heavy on the dragonfly
I observe the gentle beauty of
the caring rain.
(2)
The rain jumping and leaping in the vessels
in an attempt to go back
grows tired in a short while
and stretches itself inside the house itself
(3)
To the little boy, thoroughly drenched
bringing Tea,
when I offered some extra coins
and asked him to take it all,
slowly stirring
the Rain surged upward
ஈரம்
****
1.
மழையில் தும்பிகள் பறக்கின்றன
தும்பிக்குக் கனக்காமல் பெய்யும்
மழையைப் பார்க்கிறேன்
மழையின்
அழகான ஈரத்தைப் பார்க்கிறேன்.
2.
திரும்பிப் போக
பாத்திரங்களில் துள்ளிப் பார்த்த மழை
கொஞ்ச நேரத்தில்
வீட்டிலேயே
அசந்து படுத்துக்கொள்கிறது.
3.
சொட்ட நனைந்தபடி
டீ கொணர்ந்தத் தம்பியிடம்
கூடுதல் சில்லறை தந்து
எடுத்துக்கொள் என்றபோது
மெல்ல அசைந்து
மேல்நோக்கி எழுந்தது மழை.
- இயற்கை
No comments:
Post a Comment