INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, November 10, 2021

VELANAIYOOR RAJINTHAN

A POEM BY

VELANAIYOOR RAJINTHAN

Translated into English by Latha Ramakrishnan(*First Draft)

 RAPTUROUS LOVE

Suffice to hear the sound of bike
coming along the street
for ascertaining my arrival
My pet dog wagging its tail
would come to the gate without fail
As usual with its mischievous pranks
our lamb playfully bumps against me
every now and then
as the great grand river of love infinite.
A few days of absence notwithstanding
a crow remembers me all too well
and caws joyously
on seeing me.
Not only while eating but even when reposing
my darling cat loves so much
my nearness.
For offering a few morsels of food
circling me round and round
as the chain of love
_ the rooster and hens.
Adding beauty and luster to
all my twilight hours
Mynas and some sparrows.
It is the deliriously blissful love that
surges in all these
that changes this life filled with despair
into a hopeful affair.

அன்பின் உன்மத்தங்கள்
_________________________
தெருவில் வரும் உந்துருளி
சத்தம் கேட்டே
எனது வரவை உறுதி செய்கிறது
வாலாட்டியபடி படலைக்கு வரும்
வளர்ப்பு நாய்
எப்போதும் போலவே
தன் சுட்டித்தனத்தால்
என்னை முட்டி முட்டிப் போகிறது
அன்பின் பேராறாய்
வீட்டு ஆட்டுக்குட்டி
சில நாட்கள் இடைவெளியிருந்தும்
மறக்காமல் நினைவு வைத்திருக்கிறது
என்னைக் கண்டதும்
கரைந்து தீர்க்கின்ற காக்கை ஒன்று
உணவு உண்ணும் போது மட்டுமன்றி
ஓய்வெடுக்கும் போது கூட
எனதருகாமையை நேசிக்கின்ற
செல்லப் பூனை
சில பருக்கைகள் அளித்ததற்காய்
என்னையே சுற்றிச்சுற்றி வரும்
அன்பின் பிணைப்புக்களாய்
சேவலும் கோழிகளும்
அந்தி சாயும் மாலையெல்லாம்
எந்தன் பொழுதை அழகு சேர்க்கும்
மைனாக்களும் சில குருவிகளும்
இவை அத்தனையிலும் ஊற்றாகும்
அன்பின் உன்மத்தங்களே
ஏமாற்றம் சூழ் இவ்வாழ்வியலை
நம்பிக்கைக்குரியதாய் மாற்றிக்கொண்டிருக்கிறது!
வேலணையூர் ரஜிந்தன்.

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

PARTICIPATING TAMIL POETS IN OCT, NOV, DEC 2024 INSIGHT

INSIGHT PARTICIPATING TAMIL POETS  IN OCT, NOV, DEC 2024