A POEM BY
KADANGANERIYAN THAMIZHNAADU
1
He who knows the pain of hunger
Uses the for feeding the fishes.
2
The strength of the fish
felt
while pulling at it
with the cork submerging
is enough
3.
He who has surrendered himself to defeat
Evolves into a great hunter.
4
He who sits on the shore
and throw the bait
has the trait of fish.
5
Eating the bait-worm
the fish pulls at the cork.
The baiter snatches and pulls back
The fish-bone
writhes and leaps on the ground
6
The fish didn’t bite
Nor the cork stirred
My eyes are intent on that
The river goes on
along its course
7
He who throws the bait
questions the river.
8
He who throws the bait
disturbs the focus of the river
concentrating on the current
Furious, the fish bites
9
Time flows river-like
Life swims fish-like
Events throw off
everything alike.
கடங்கநேரியான் தமிழ்நாடு
1 . பசியின் வலியறிந்தவன்
தூண்டிலை மீன்களுக்கு
உணவளிக்கப் பயன்படுத்துகிறான் .
2 .
தக்கை மூழ்க
சுண்டியிழுக்கும் போது
உணரும் மீனின் வலிமை போதும்
3 .
தோல்விக்கு
தன்னை ஒப்புக் கொடுத்தவனே
சிறந்த வேட்டையாடி யாகிறான் .
4 .
கரையிலமர்ந்து
தூண்டிலிடுபவனுக்கு
மீனின் குணம் .
5 .
தூண்டில் புழுவைத் தின்றபடி
தக்கையை இழுக்கிறது மீன்
சுண்டியிழுக்கிறான் வேட்டையாடி
தரையில் துள்ளுகிறது
முள்
6 .
மீனும் கடிக்கவில்லை
தக்கையும் அசையவில்லை
என் கண்களின் பார்வை அதிலேயே இருக்கிறது
ஆறு அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது .
7 .
தூண்டிலை வீசுபவன்
ஆற்றிடம் கேள்வி கேட்கிறான் .
8 .
ஓட்டத்தில் மனம் குவித்திருக்கும்
ஆற்றின் கவனத்தை சிதறடிக்கிறான்
தூண்டில் காரன்
கோபத்தில் கடிக்கிறது மீன் .
9 .
காலம் நதியென ஓடிக் கொண்டிருக்கிறது
வாழ்வு மீனென நீந்துகிறது
சம்பவங்கள் வெளியே தூக்கி வீசுகிறது .
யாவற்றையும் .
No comments:
Post a Comment