INSIGHT - A BILINGUAL ONLINE MAGAZINE

Wednesday, July 3, 2024

HUMAIRA AL AMEEN

 A POEM BY 

HUMAIRA AL AMEEN



Translated into English by Latha Ramakrishnan(*First Draft)


The butterflies drawn by thee
in the semblance of fish
should be painted with rainbow
You insist...
That they don’t fly
You remain stubborn
Stamping your feet on the floor
Upon the crops
That you had drawn in Green
You bring a vessel water-filled
and pour water on them.
For the plant that grows not
For the fish that swim not
For the living beings who don’t walk
And for the birds that don’t fly.
Entwining my heart with yours
Which think that all that
you have drawn
are alive and kicking
I learn to bring to life
all things drawn
to prevent you from shedding tears
My dearest…
Humaira AlAmeen

மீன்களைப் போல
நீ வரைந்த பட்டாம் பூச்சிகளுக்கு
வானவில்லைக் கொண்டு தான்
நிறம் தீட்ட வேண்டுமென்கிறாய்..
கால்களைத் தரையில்
தட தடவென அடித்து
அவை பறக்கவில்லையென
அடம் பிடிக்கிறாய்
பச்சையாய் நீ வரைந்த
பயிர்களின் மீதெல்லாம்
பாத்திரம் நிறைய
நீர் கொண்டு வார்க்கிறாய்
வளராத செடிக்காயும்
நீந்தாத மீன்களுக்கும்
நடக்காத உயிர்களுக்கும்
பறக்காத பறவைக்குமாய்
நீ வரைந்த அத்தனைக்கும்
உயிர் இருக்கிறதென்று
நினைக்கின்ற உன் மனதில்
நானும் இணைந்து கொண்டு
சித்திரங்களை உயிர்ப்பிக்க
கற்றுக் கொள்கிறேன்
என் செல்லமே நீ
அழக்கூடாது என்பதற்காய்..

~ ஹுமைரா அல் அமீன் ~

No comments:

Post a Comment

INSIGHT MARCH 2021

INSIGHT - JULY - SEPTEMBER, 2024